அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) சார்பில் நடந்த பல்வேறு
போட்டிகளில், மாணவ, மாணவியர் பரிசுகளை தட்டிச் சென்றனர்.
எஸ்.எஸ்.ஏ.,
சார்பில், மாணவ, மாணவியர் மத்தியில் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும்
நோக்கில், தொடர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.அதன்படி, பெண்
கல்வி, இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் மற்றும் சுகாதாரம் குறித்த
விழிப்புணர்வை, மாணவ, மாணவியர் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில், பள்ளிகள் அளவில் துவங்கி, வட்டார மற்றும் மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட்டன.பள்ளிகள் மற்றும் வட்டார அளவில் போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு இடையேயான, மாவட்ட அளவிலான போட்டிகள், ஊட்டி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள, ஜி.யு.போப் அரங்கில் நடந்தது.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, உதவி திட்ட அலுவலர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இப்போட்டிகளில், மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர். இதில், முதல் வகுப்பு துவங்கி, 3ம் வகுப்பு வரை, ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. 4,5 வகுப்புகளுக்கு, பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது. 6 முதல், 8ம் வகுப்பு வரை, ஓவியப் போட்டியும், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டன.பரிசுத் தொகையாக, முதல் வகுப்பு துவங்கி, 5ம் வகுப்பு வரையிலான பிரிவில், முதல் பரிசாக, 2,000; இரண்டாம் பரிசாக, 1,600; மூன்றாம் பரிசாக, 1,200 ரூபாயும், 6 முதல், 8ம் வகுப்பு வரையிலான பிரிவில், முதல் பரிசாக, 3,000; இரண்டாம் பரிசாக, 2,500; மூன்றாம் பரிசாக, 2,000 ரூபாயும் வழங்கப்பட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...