மருத்துவ பொது நுழைவுத் தேர்வான நீட் தேர்வை 3 முறை வரை எழுதலாம் என யூஜிசி தெரிவித்துள்ளது.
டில்லியில் நேற்று நடந்த யூஜிசி ஆலோசனை கூட்டத்தில் நீட் தேர்வு தொடர்பாக
சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, நீட் தேர்வு எழுத குறைந்தபட்ச
வயது 17 ஆக இருக்க வேண்டும். பொது பிரிவு மாணவர்கள் 25 வயது வரையிலும்,
இடஒதுக்கீடு மாணவர்கள் 30 வயது வரையிலும் நீட் தேர்வை எழுதலாம். தங்களுக்கு
ஒதுக்கீடு செய்யப்பட்ட வயது வரம்பிற்குள் 3 முறை நீட் தேர்வு எழுதலாம்.
யூஜிசி.,யின் இந்த முடிவுக்கு மகாராஷ்டிரா மருத்துவ கல்வி மற்றுமண்
ஆராய்ச்சி இயக்குனரகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...