இந்தியா வந்துள்ள கூகுள் சி.இ.ஓ சுந்தர்பிச்சை, அவர் படித்த ஐ.ஐ.டி
கரஹ்பூருக்கு சர்ப்ரைஸ் விசிட் தந்துள்ளார்.
ஐ.ஐ.டி மெஸ்களில் எனக்கு தெரிந்த ஒரே இந்தி வார்த்தையான ''அபே சாலே''
என்ற இந்தி வார்த்தையை அர்த்தம் தெரியாமலேயே கூறியிருக்கிறேன். பின்பு தான்
அதற்கான அர்த்தத்தை தெரிந்து கொண்டேன் என்று கூறினார். மேலும் தான்
தங்கியிருந்த B-308 அறைக்கு சென்று அங்கு இப்போது தங்கி இருப்பவர்களுடன்
உரையாடியுள்ளார்.
‘தான் வகுப்புகளுக்கு அடிக்கடி மட்டம் போடுவேன். ஆனால் நன்றாக
படித்துவிடுவேன். முதல் செமஸ்டரில் சி-க்ரேட் வாங்கியதற்காக
வருத்தமடைந்துள்ளேன்’ என்று கூறினார்.
‘ஐ.ஐ.டி ஹாஸ்டலுக்கு வெளியே உள்ள இடத்தில் நாங்கள் எப்போதும் கிரிக்கெட்
ஆடுவது வழக்கம். அப்போது நிறைய ரூம்களின் கண்ணாடிகளை உடைத்திருக்கிறோம்.
குளிர்காலத்தில் அவற்றை பேப்பரால் மறைத்து வைத்திருந்தது மறக்க முடியாத
நினைவுகள்’ என்றார். ‘சில நேரங்களில் நாங்களே மேகி சமைத்து
சாப்பிட்டிருக்கிறோம் என கரஹ்பூர் நினைவுகளை பகிர்ந்து கொண்டார் சுந்தர்
பிச்சை.
ஐஐடி வளாகத்துக்குள் எப்போதாவது ராகிங்கிற்கு உள்ளான அனுபவம்
இருக்கிறதா? என்ற கேள்விக்கு ‘இருக்குறது, ஆனால் அவை மிகவும் ரசிக்கக்கூடிய
அளவில்தான் இருக்கும் என்றார். குறிப்பாக புதிய மாணவர்கள் வெளியில் சென்று
விட்டு வருவதற்குள் அவர்களது ஹாஸ்டல் அறை முழுவதுமாக
மாற்றியமைக்கப்பட்டிருக்கும் பார்க்க ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும்
இருக்கும்’ என்றார்.
கிரிக்கெட் விளையாட்டை அதிகம் விரும்பி பார்ப்பதாக கூறிய
சுந்தர் பிச்சை, தற்போது உள்ள வீரர்களில் விராட் கோலியை மிகவும் பிடிக்கும்
என்றும் தெரிவித்தார். விராட் கேப்டனாகி இருப்பதை பாராட்டியுள்ளார்.
தமது இளமைகாலத்தில் கவாஸ்கரை மிகவும் பிடிக்கும் என்றும், தற்போது கோலியை
மிகவும் பிடிக்கும் என்றும் தெரிவித்தார். பாலிவுட் நடிகர்களில் ஷாருக்,
தீபிகாவை பிடிக்கும் என்றார். இவர்களை ஒருமுறை கூகுள் அலுவலகத்துக்கு
அழைத்து சுந்தர்பிச்சை கலந்துரையாடியது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து, கரஹ்பூர் ரயில்வே நிலையத்துக்குச் சென்ற சுந்தர்பி
ச்சை, தான் சென்னை செல்வதற்கு கோரமெண்டல் எக்ஸ்ப்ரஸில் மூன்றாம் வகுப்பு
டிக்கெட்டில் பயணித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டார். பிரதம மந்திரியின்
டிஜிட்டல் இந்தியாவில் கைகோர்க்கும் விதமாக 400 ஸ்டேஷன்களில் வை-பை வசதி
நிறுவப்படும் என்றார். தற்போது மக்கள் இணைய சேவைக்காக ரயில் நிலையங்களுக்கு
வருவது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறினார்.
இதற்கு முன்பாக மாணவர்களுடனான கலைந்துரையாடலில்
இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சி, அதில் கூகுளின் பங்களிப்பு என பல
விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார் சுந்தர் பிச்சை. இந்தியாவுக்காக
தயாரிக்கப்படும் ஒவ்வோரு பொருளும் உலகத்துக்காக தயாரிக்கப்பட்டதை போன்றது
என்றார்.
தனது நினைவுகளை பகிர்ந்து கொண்ட சுந்தர்பிச்சையிடம் ஐ.ஐ.டி மாணவர்கள்,
ஐ.ஐ.டி கரஹ்பூருக்கு டூடுல் வழங்க முடியுமா? என கேட்க அனுப்பி வைய்யுங்கள்.
தேர்வானால் மகிழ்ச்சி என கூறி சென்றுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...