*பேஸ்புக்,வாட்ஸ்அப் போன்ற சமூகவலைதளங்கள் பெரும்பான்மையான மக்களால்
பயன்படுத்தப்படும் இன்றைய காலக்கட்டத்தில்,எந்த ஒரு தவறான செய்தியையும்
எளிதில் பரப்பிவிடலாம்.*
*அதுபோன்ற ஒரு தவறான செய்திதான் இதுவும்.
முதலில் இதில் உள்ள தவறுகளைச் சுட்டுகின்றேன்*
*ஓர் ஆண்டிற்கு ஆசிரியர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவ விடுப்பு -15 நாட்கள்*
*இந்த மருத்துவ விடுப்பையும் பெரும்பாலான ஆசிரியர்கள்
எடுப்பதில்லை.அத்தியாவசியமாக அல்லது ஏதேனும் உடல்நலக் குறைவு ஏற்பட்டால்
மட்டுமே இந்த விடுப்பை எடுக்கின்றனர்.*
*EL என்று சொல்லப்பட்டிருக்கும் (Earned Leave)விடுப்பும் வருடத்திற்கு
-15 நாட்கள்தான்.இதுவும் பெரும்பான்மையான ஆசிரியர்களால்
எடுக்கப்படுவதில்லை.*
*சனி,ஞாயிறுகளைப் பொறுத்தவரை வருடத்தின் 52 வாரங்களிலும் வரும்
சனி,ஞாயிறுகளின் எண்ணிக்கையைப் பெருக்கி 104 என அந்த அதிமேதாவி
தந்துள்ளார்.இதுவும் தவறு.*
*ஏனென்றால்,தொடக்கநிலைப் பள்ளிகள் வருடத்திற்கு 220 நாட்களும்,உயர்நிலை
மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் வருடத்திற்கு 210 நாட்களும் கட்டாயம் பணிபுரிய
வேண்டும். அந்தவகையில் கட்டாயம் சாராசரியாக மாதம் மூன்று சனிக்கிழமைகளில்
பள்ளி இயங்குகிறது.*
*மேலும்,10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் சனி
மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் பயிற்சி வகுப்புகள் வைக்க வேண்டும் என்பது
கட்டாயமாக இருக்கின்றது.*
*அடுத்ததாக,மழை,வெயில் மற்றும் மாவட்ட ஆட்சியரால் விடப்படும் உள்ளூர்
விடுமுறைகள் எல்லாமே Compensate Holidays ஆகத்தான் வரும்.கட்டாயம் இந்த
விடுமுறைகளை சனிக்கிழமைகளில் பள்ளிகள் வைத்து ஈடுசெய்ய வேண்டும்.*
*அடுத்ததாக Tour,Sports day மற்றும் Annual day இவைகளுக்கென்று தனியாக
விடுமுறை விடப்படுவதில்லை.விடுமுறை நாட்களிலையோ அல்லது பள்ளி நாட்களிலையே
நடத்தப்படும்.இந்த நாட்களில் கட்டாயமாக ஆசிரியர்கள் விடுப்பில் இருக்க
முடியாது.பணியில்தான் இருக்க வேண்டும்.*
*அடுத்ததாக,அரசு விடுமுறை என்பது ஆசிரியர்களுக்கு மட்டும்
அல்ல.ஒட்டுமொத்த அரசு ஊழியர்களுக்கும்தான். அதுபோலத்தான் 12 நாட்கள்
தற்செயல் விடுப்பும் (CL) அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும்.*
*முழுஆண்டுத் தேர்வுக்கான விடுமுறை 40 நாட்கள் என்பது தவறு.மே மாதம்
மட்டும் விடுமுறை.அந்த விடுமுறையிலும்,மாணவர்களின் விடைத்தாள்கள்
திருத்துவது,மாணவர்களுக்கு ரிசல்ட் போடுவது,அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர்
சேர்க்கையில் ஈடுபடுவது போன்ற பணிகள் நிறைந்துள்ளன.*
*அடுத்ததாக,நாள் ஒன்றுக்கு ஆசிரியர்களின் பணிநேரம் நான்கு மணிநேரம் என்பது நவீன குமாராசாமியின் கருத்து தவறு*
*பயிற்சி வகுப்புகளுக்கு அப்பாற்பட்டு பள்ளி அலுவல் நேரம்*
*தொடக்கநிலைப் பள்ளிகளுக்கு காலை 9.10 முதல் 4.10 வரை*
*உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு காலை 9.30 முதல் மாலை 4.40 வரை பள்ளி செயல்படும்.*
*இந்த பள்ளி நேரங்களில் கட்டாயமாக ஆசிரியர்கள் 7 மணி நேரம் பணிபுரிய வேண்டும்.*
*LTC (Leave Travel Concession) -90% ஆசிரியர்கள் எடுப்பதில்லை.*
*வக்கனையாக, ஆசிரியர்களைப் பற்றி மட்டும் அவதூறாக குறைகாண வேண்டாமே*
unmaiya sonna vairu eriyuthu....post panna kuda thembilla
ReplyDeleteCORRECT SIR SUPER REPLY
ReplyDeleteமுட்டாள்களுக்கும் வெத்துவேட்டுகளுக்கும் பதிலளித்து நம் நேரத்தை வீணடிக்க வேண்டாமே
ReplyDeleteஇது தவிர பத்து மற்றும் பனிரென்டாம் வகுப்புகளுக்கு காலை.மாலை. சனி.ஞாயிறு சிறப்பு வகுப்புகள் என்ற கூடுதல் சுமை வேறு உள்ளது. அதி மேதாவிகளுக்கு என்ன தெரியும்
ReplyDeleteஇது தவிர பத்து மற்றும் பனிரென்டாம் வகுப்புகளுக்கு காலை.மாலை. சனி.ஞாயிறு சிறப்பு வகுப்புகள் என்ற கூடுதல் சுமை வேறு உள்ளது. அதி மேதாவிகளுக்கு என்ன தெரியும்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete