*பணிப்பதிவேட்டில் விடுபட்ட விபரங்களை பதிவு செய்வது போல் இதுவரை பதியப்பட்ட விபரங்களை சரிபார்பது மிகவும் முக்கியமானது*
பணிப்பதிவேட்டில் பதியப்பட்டுள்ள பதிவுகளில் உள்ள
1. ந.க. எண் / தேதி
2. வரிசை எண்
3. பதிவு எண்
4. வழங்கப்பட்ட தேதி
5. தேர்ச்சி பெற்ற தேதி
6.பணியேற்ற தேதி மற்றும் மு.ப/பி.ப
7.விடுவித்த தேதி மற்றும் மு.ப/பி.ப
*மேற்கண்ட அனைத்தையும் உங்களிடம் உள்ள சான்றிதழ்களுடன் ஒப்பிட்டு சரிபார்ப்பது மிகவும் அவசியம் ஆகும்*
அதே போல் துறை சார் அலுவலரின் கையொப்பம் முத்திரை இல்லாத பதிவுகளை சுட்டிக்காட்டவும்.
வாரிசுதாரர் பெயர்களை பதிவு செய்யும் பொழுது பின்புறம் இரண்டு ஆசிரியர்களிடம் சாட்சிக் கையெழுத்து வாங்கிய பின் தங்களின் கையொப்பத்தையும் செய்யவும்.
ஒவ்வொரு ஆண்டும் ஊதிய உயர்வு பெற்றதற்கான பதிவுகள் தொடர்ச்சியாக செய்யப்பட்டுள்ளதா?
பணி நியமனம் பெற்றது முதல் 31.12.2016 வரை பணிப்பதிவேடு சரிபார்த்தல் என்ற பதிவு தொடர்ச்சியாக உள்ளதா...?
ஈட்டிய விடுப்பு கையிருப்பை கணக்கீடு செய்ததில் தவறுகள் ஏதேனும் உள்ளதா..? (365÷21.47=?)
அதே போல் உயர் கல்வி பயின்ற அனைத்து படிப்பிற்கும் பட்டயச்சான்றினை (கான்வகேசன்) பதிவு செய்வது அவசியம் ஆகும்.
*பணிப்பதிவேட்டினை சரிபார்ப்பதற்கான check list -ஐ கொண்டு சரிபார்க்கும் பொழுது*
10th, 12th,
DTEd,
UG degree,
PG degree,
B.Ed,
M.phill/M.Ed,
போன்ற சான்றிதழ்களின் நகல்கள் (அனைத்திற்கும் பட்டயச்சான்று அவசியம்)
*{ இதுவரை பதிவு செய்யாத கல்வித் தகுதியினை பதிவு செய்ய ஒரிஜினல் சான்றிதழையும், பதியப்பட்டதை சரிபார்க்க நகலினையும் கொண்டுசெல்லவும் }*
துறை தேர்வு தேர்ச்சி பெற்ற ஆணை,
CPS / TPF எண்,
துறை முன் அனுமதி /பின் அனுமதி,
உண்மைத்தன்மை சான்றிதழ்கள்,
பணியேற்பு ஆணை,
பணிவிடுப்பு ஆணை,
மாறுதல் பெற்ற ஆணை,
பதவி உயர்வு பெற்ற ஆணை,
தகுதிகாண் பருவத்திற்கான ஆணை,
Pay commission Pay fixation / arrear/P.P ஆணை,
தேர்வுநிலை/சிறப்புநிலை பெற்றதற்கான ஆணை,
கற்பித்தல் பயிற்சி சென்றதற்கான ஆணை
இதுவரை ML, EL, halfpay, loss of pay, மகப்பேறு விடுப்பு,
& கருச்சிதைவு விடுப்பு எடுத்த விபரம்,
EL ஒப்படைத்த விபரம்,
இன்சென்டிவ் பெற்ற ஆணை,
அரசு கடன் பெற்ற ஆணை,
*மேற்கண்டவற்றில் தங்களிடம் உள்ள ஆணைகளின் நகல்கள் மற்றும் விபரங்களை வைத்து தங்களின் பணிப்பதிவேட்டினை சரிபார்க்கவும்.*
✒ தேவராஜன்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...