ஐந்து மாநில தேர்தலை முன்னிட்டு, தமிழ் உள்பட சில சி.பி.எஸ்.இ. பாடத் தேர்வுத் தள்ளி வைகப்பட்டுள்ளது.
இந்த வருடத்திற்கான 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பிற்கான இறுதித் தேர்வின் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிப்ரவரி 4ஆம் தேதி முதல் மார்ச் மாதம் முதல் வாரம் வரை பஞ்சாப், கோவா, உத்தரபிரதேசம், த்தரகாண்ட் உள்பட ஐந்து மாநில தேர்தல் நடைபெற உள்ளது.
மேலும் 10ஆம் வகுப்பின் தமிழ் பாடத்தேர்வு வரும் மார்ச் 10ஆம் தேதி நடப்பதாக இருந்த தேர்வு மார்ச் 18ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குருங் மொழித் தேர்வு மார்ச் 23ஆம் தேதிக்குப் பதில் மார்ச் 10ஆம் தேதி எனவும், என்.சி.சி. தேர்வு மார்ச் 15ஆம் தேதிக்குப் பதில் 23ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
12ஆம் வகுப்புக்கான உடற்கல்விக்கான தேர்வு வரும் ஏப்ரல் 10ஆம் தேதியில் இருந்து 12ஆம் தேதிக்கும், சமூகவியல் தேர்வு ஏப்ரல் 12ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 20ஆம் தேதிக்கும், திரையரங்கு ஆய்வு தேர்வு ஏப்ரல் 20ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 10ஆம் தேதியும், தங்குல் மொழிப்பாட தேர்வு மற்றும் உணவு சேவை தாள் தேர்வு ஏப்ரல் 29ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...