பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் 144 ரூபாய்க்கு கணக் கில்லாத உள்ளூர் மற்றும் வெளி யூர் (STD) அழைப்புகளை மேற் கொள்ளும் வசதியை அறிவித்துள்ளது.
பல்வேறு தொலைத் தொடர்பு நிறுவனங்களும் கட்டணச் சலுகைகளை அறிவித்து வருகின்றன. இந்த நிலையில் பொதுத்துறை நிறுவனமாக பிஎஸ்என்எல் நிறுவனமும் ரூ.144 சலுகை கட்டணத்தை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக நேற்று பேசிய நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான அனுபம் வாஸ்தவா, இந்த சலுகையில் எந்த தொலைதொடர்பு நிறுவனத் தின் எண்ணாக இருந்தாலும் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளுக்கு கணக்கில்லாமல் ஒரு மாதத்தில் பேசிக்கொள்ளலாம். மேலும் 300 எம்பி இண்டர்நெட் டேட்டாவும் கிடைக்கும். இந்த சலுகை ஆறு மாதங்களுக்கு இருக்கும் என்றார். மேலும் பிரீ-பெய்ட், போஸ்ட்-பெய்ட் இரண்டு வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும் என்றார்.
40,000 ஹாட்ஸ்பாட் சேவை
பிஎஸ்என்எல் நிறுவனம் 4,400 வைஃபை ஹாட்ஸ்பாட் சேவையையும் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியுள்ளது. அடுத்த ஒரு ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் 40 ஆயிரம் வைஃபை ஹாட்ஸ்பாட் சேவையை விரிவுபடுத்த உள்ளாம். மகாபலிபுரத்தில் வைஃபை சேவை உள்ளது என்றும் கூறினார்.
கிராமப்புற பகுதிகளில் சேவையை விரிவுபடுத்துவதற்கு ஏற்ப மத்திய அரசிடமிருந்து 2500 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசையை நிறுவனம் பெற்றுள்ளது என்றும், அகண்ட அலைவரிசையை அடிப்படையாக கொண்ட சிறப்பான எல்டிஇ சேவையை வழங்குகிறது என்றும் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...