டில்லி மெட்ரோ ரயிலில், பெண்கள், தங்கள் பாதுகாப்பிற்காக கத்தி வைத்திருக்க
அனுமதி வழங்க முடிவு செய்துள்ளதாக, சி.ஐ.எஸ்.எப்., அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக டில்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள சி.ஐ.எஸ்.எப்., அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: பெண்கள் தங்கள் பாதுகாப்பிற்காக, 4 அங்குல அ ளவுள்ள கத்தியை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும்போது கொண்டு செல்லலாம். இந்த கத்திகள், பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்காது. ஆனால், பெண்களின் பாதுகாப்புக்கு இது உதவியாக இருக்கும் எனக்கூறினார்.
தீப்பெட்டி, லைட்டர்களை அனுமதிக்கவும் சி.ஐ.எஸ்.எப். முடிவு செய்துள்ளது. இருப்பினும், ஒரு நபர் இவறறை ஒன்று தான் கொண்டு செல்ல அனுமதி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், இந்த சாதனங்களை கொண்டு செல்பவர்களின் விபரங்களை பராமரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...