அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால் நாளை (வெள்ளிக்கிழமை) முதல்
தமிழ்நாட்டில் மழை பெய்யும் என்று வானிலை மைய இயக்குனர் ஸ்டெல்லா தெரிவித்தார். பனி பெய்கிறது
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை முடிந்து இப்போது இரவில் பனிபெய்து வருகிறது.
அதிகாலையிலும் குளிர் அதிகமாக இருப்பதால் சென்னை புறநகர் பகுதிகளில் மக்கள் தீ மூட்டி குளிர் காய்கிறார்கள். இந்த நிலையில் தாய்லாந்து அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது என்று வானிலை மையம் அறிவித்த, மக்களுக்கு சற்று ஆறுதலாக உள்ளது. வானிலை நிலவரம் குறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் ஸ்டெல்லா கூறியதாவது;- தாய்லாந்து அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நேற்று முன்தினம் உருவானது. அது மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. அது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக அந்தமான் அருகே உள்ளது.

நாளை முதல் மழை பெய்யும்
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுப்பெற வாய்ப்பில்லை. இருப்பினும் தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் மழை பெய்யும். நாளை தமிழ்நாட்டில் தென்கடலோர பகுதியில் பெய்யும். அதைத்தொடர்ந்து 21 மற்றும் 22 தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்யும். அதற்கு பின்னர் மழை பெய்வது குறித்து இப்போதைக்கு எதுவும் கூறக்கூடாது. இருந்தாலும் தமிழகத்தில் 19-ந்தேதி வறண்ட வானிலைதான் நிலவும். இவ்வாறு ஸ்டெல்லா தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...