அரசு ஊழியர்கள்ஆசிரியர்களுக்கு பொங்கல்போனஸ் கடந்தஆண்டுகளில்
A,B ஊழியர்களுக்கு 1000/- C,D ஊழியர்களுக்கு 3000/ வழங்கப்பட்டு வந்தது ஆனால் தற்போது பொங்கல் போனஸ் தொகையினை உயர்த்திவழங்க தமிழகஅரசுமுடிவுசெய்துள்ளதாகசெய்திகள் வெளியாகி உள்ளது. இது குறித்தஅறிவிப்பு இன்னும்ஒரீரு நாளில்முறையானஅறிவிப்பு வெளியாகும்.
சமீபத்தில்மத்திய அரசுஊழியர்களுக்குபோனஸ்உச்சவரம்புஉயர்த்தப்பட்டுள்ளது ...
தொழிலாளர்களுக்குவழங்கப்படும்தீபாவளி போனஸ்உச்சவரம்புதொகை ரூ.3,500-லிருந்து ரூ.7,000 ஆகஉயர்த்தப்பட்டுள்ளது. இதற்குமத்தியஅமைச்சரவை நேற்றுஒப்புதல் அளித்தது.
தொழிற்சாலைமற்றும் பிறநிறுவனங்களில்பணிபுரியும்தொழிலாளர்களுக்குஆண்டுதோறும் தீபாவளிக்குமுன்னதாக போனஸ்வழங்கப்படுகிறது. இதற்கானபோனஸ் சட்டம்கடந்த 1965-ம்ஆண்டுஅமல்படுத்தப்பட்டது.
இந்தச்சட்டத்தில் கடந்த 1993-ல்திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, போனஸ் உச்சவரம்புஅதிகபட்சமாக3,500 என்றுஅறிவிக்கப்பட்டது. மேலும்போனஸ் பெறுவதற்கானசம்பளஉச்சவரம்பும் 10 ஆயிரம்ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது.
அதன்பின், இந்தச் சட்டத்தில்திருத்தம் செய்யப்படவில்லை. போனஸ் தொகை ரூ.3,500 என்றே வழங்கப்பட்டது. கடந்த 12 ஆண்டு களாகபோனஸ்தொகை உயர்த்தப்படாததை கண்டித்துமத்தியதொழிற் சங்கங்கள்கடந்த செப்டம்பர் 2-ம்தேதிபோராட்டத்தில் ஈடுபட்டன. மத்திய அமைச்சர்கள் குழு, தொழிற்சங் கங்களுடன்நடத்திய பேச்சுவார்த்தை யில், போனஸ் தொகையைஇரட்டிப்பாக்கவும், போனஸ்பெறுவதற்கான சம்பளஉச்ச வரம்பைஉயர்த்தவும்ஒப்புக் கொண்டது.
இந்நிலையில், மத்தியஅமைச்சரவை கூட்டம்டெல்லியில் நேற்றுகூடியது. அப்போது பல்வேறு முக்கியவிஷயங்கள்குறித்துஅமைச்சர்கள் ஆலோசனைநடத்தினர். மேலும், இந்தஆண்டு போனஸ்தொகையைரூ.3,500-இல்இருந்து ரூ.7,000 ஆகஉயர்த்தவும், போனஸ்பெறுவதற்கான சம்பளஉச்சவரம்பை தற்போதுள்ள ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.21 ஆயிரமாகஉயர்த்தவும்அமைச்சரவை ஒப்புதல்அளித்தது.
இந்த தொகை 20 ஊழியர்கள்அல்லது அதற்கு மேல்உள்ளஎல்லா நிறுவனங்களுக்கும்பொருந்தும். இந்த போனஸ்உயர்வு ஏப்ரல்1, 2015 முதல்அமலுக்கு வருகிறது. இதற்காக, ‘போனஸ் (திருத்த) மசோதா-2015’, நாடாளுமன்றத்தின்ஒப்புதலுக்காக தாக்கல்செய்யப்படும் என்றுமத்தியஅரசு வட்டாரங்கள்நேற்றுதெரிவித்தன.
போனஸ்சட்டத்திருத்த மசோதா, நாடாளுமன்ற அனுமதிக்காகஅனுப்பப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின்குளிர்காலகூட்டத்தொடர்நடத்துவது குறித்து நேற்றுநடந்த மத்தியஅமைச்சரவைகூட்டத்தில் ஆலோசனைநடத்தப்பட்டது. எனினும்முடிவுஎதுவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், வரும் 26-ம் தேதிமீண்டும்அமைச்சரவை கூடிமுடிவெடுக்க உள்ளது. நவம்பர்மாத இறுதியில்குளிர்காலகூட்டத் தொடர்நடைபெறும் போது, போனஸ்சட்டத் திருத்தமசோதாநிறைவேற்றப்படும்என்று தெரிகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...