இந்திய ரயில்வே துறை அதன் புதிய டிக்கெட் முன்பதிவு ஆப்பை
வெளியிட்டுள்ளது. இந்த அப்டேட்டில் - மிகவும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான -
டிக்கெட் புக் செய்யப்படவில்லை என்றாலும் கூட பணம் கழிக்கப்படும் ஆப்
மற்றும் அதிகாரபூர்வமான இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக
வலைத்தளம் ஆகிய இரண்டிற்கும் இடையே இருந்த ஒருங்கிணைப்பு சிக்கல்
நீக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பயன்பாடு ஜனவரி 10, 2017 அன்று
தொடங்கப்பட்டது. இது முந்தைய ஐஆர்சிடிசி ரெயில் கனெக்ட் என்ற ஆப்பிற்கு
பதிலாக ஐஆர்சிடிசி ரெயில் கனெக்ட் என்று மாற்றி அழைக்கப்படுகிறது என்பதும்
குறிப்பிடத்தக்கது. சரி இந்த ஐஆர்சிடிசி ஆப் அப்டேட்டில் இருந்து போனது
என்ன.? புதிதாய் வந்தது என்னென்ன.? முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க
க்ளிக் செய்யவும் அறிக்கை கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் அப்டேட்
செய்யப்பட்ட பழைய ஆப்பில் பல குற்றசாட்டுகள் இருந்தன. அதனை தொடர்ந்து
அமைச்சகம் (www.seithiula.blogspot.in) புதிய ஆப் மூலம் பயணிகள் எந்தவிதமான
தடைகளையும் எதிர்கொள்ளாமல் எளிமையாக பிராயணங்களை மேற்கொள்ளவர்கள் என்று
வெளியிட்டது.
போனது நம்பர் #01
இந்த அப்டேட் மூலம் காலை 8 மணி முதல்
நண்பகல் வரை புக்கிங் அனுமதி கிடையாது என்ற "சட்டம்" விலக்கி
கொள்ளப்படுகிறது. உடன் டிக்கெட் முன்பதிவு பார்வையானது (வியூஸ்)
இணையதளத்தில் முன்பதிவு பார்வையோடு ஒருங்கிணைக்கப்படாது என்ற வரம்பும்
விளக்கி கொள்ளப்பட்டுள்ளது.
போனது நம்பர் #02
"தற்போதைய புக்கிங் மற்றும் ஏறும் இடம்
மாற்றம்" போன்ற அம்சங்களிலும் மாற்றங்கள்
ஏற்படுத்தப்பட்டுள்ளன உடன் "மெதுவான பதில் நேரம்" மற்றும் "குறைந்த
பாதுகாப்பு நிலைகள்" ஆகியவைகளும் சரிப்பட்டுள்ளன.
புதிதாய் வந்தது#01
ஏற்கனவே 1 லட்சத்திற்கும் மேற்பட்ட முறை
ஆண்ட்ராய்டில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய ஆப்பில் பின்வரும்
அம்சங்கள் தற்போது புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
- எந்த நேரத்திலுமான 24/7 சேவை.
-என்ஜிஇடி மற்றும் மொபைல் ஆப் ஆகிய இரண்டிற்கும் இடையிலேயான டிக்கெட் முன்பதிவு ஒத்திசைவு
- எளிய பயனர் இடைமுகம்
- ஜெனரல், லேடிஸ், தட்கல் மற்றும் தட்கல் கோட்டா புக்கிங் ஆதரவு
புதிதாய் வந்தது#02 -
இணையதளம் மூலம் பதிவு டிக்கெட் ரத்து மற்றும் டிடிஆர் பில்லிங் வசதி - கரண்ட் புக்கிங் வசதி
- போர்டிங் புள்ளி மாற்றும் வசதி
- பிஎன்ஆர் விசாரணை வசதி
- ஒரு கட்டுப்பாட்டு முறையில் வழங்கப்படும் தட்கல் புக்கிங் வசதி
புதிதாய் வந்தது#03
- செல்ப் அசைன்டு பின் மூலம் லாக்-இன் செய்யும் பயனர்களுக்கான மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள்
- ஆப் மூலம் நேரடியாக புதிய பயனர் பதிவு
மற்றும்ஆக்டிவேஷன் முறை. -வேகமாக மற்றும் தொந்தரவு இல்லாத
பரிவர்த்தனைகளுக்கு ஐஆர்சிடிசி- வேலட் ஒருங்கிணைப்பு - பயனர்கள் பழைய
மொபைல் ஆப்பின் டிக்கெட்களையும் ரத்து செய்ய முடியும் அம்சம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...