உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பின்பு பயணச்சீட்டை ரத்து
செய்தவர்களுக்கு பணத்தை திரும்ப அளிக்க சிறப்பு கவுன்ட்டர் திறக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இதுகுறித்து புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததையடுத்து பொது மக்கள் தங்களிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுகள் மூலம் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மேற்கொண்டனர். ஆனால் அப்போது, கவுன்ட்டர்களில் பயணிகளுக்கு பயணச்சீட்டு ரத்து செய்ததற்கான பணத்தை திரும்பிக் கொடுப்பதில் சிக்கல் இருந்ததால் அவர்களுக்கு ரசீது மட்டுமே வழங்கப்பட்டது.பயணியின் வங்கிக் கணக்கு எண் கொடுத்தால் முன்பதிவு ரத்துக்கான பணம் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையில், நவம்பர் 8 -ஆம் தேதி தொடங்கி 3500 பேர் பயணச்சீட்டை ரத்து செய்துள்ளனர். அவர்களுக்கு பயண ரத்துக்கான ரசீதும் வழங்கப்பட்டது.
இன்னும் சில பயணிகளுக்கு ரயில் பயணச்சீட்டு ரத்துக்கான ரசீதும், பணமும் திரும்ப தரும் நடைமுறையை துரிதப்படுத்த, சென்னை மூர்மார்க்கெட் வளாகத்தில் 5 -ஆவது மாடியில் சிறப்பு கவுன்ட்டர் திறக்கப்பட்டுள்ளது.அங்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட பயணச்சீட்டு ரசீதை செலுத்தி, வங்கி கணக்கு எண்ணையும் சமர்ப்பித்தால், மின்னணு பணப்பறிமாற்றம் முறையில் வங்கி கணக்கில் பயணச்சீட்டு ரத்துக்கான பணம் செலுத்தப்படும்.இந்த சிறப்பு கவுன்ட்டர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை செயல்படும்.
மேலும் விவரங்களை 044 -2535 4897, 044 -2535 4746, 90031 60955 மற்றும் இ -மெயில் www.cco@sr.railnet.gov.in, www.dyccmclaims@sr.railnet.gov.in.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...