ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் மேகா, திருநங்கையான இவர் தன் பெற்றோருடன்
வசித்து வந்தார். மேகாவுக்கு திருமணம் செய்து வைக்க இவரின் பெற்றோர் முடிவு
செய்து மாப்பிள்ளை தேடும் படலத்தில் ஈடுப்பட்டு வந்தார்கள்.
இந்நிலையில், மேகா வசிக்கும் பகுதியில் இருக்கும் பாசுதேவ் நாயக் என்னும் எம்.பி.ஏ பட்டதாரி மேகாவை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். துபாயில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவரும் பாசுதேவின் விருப்பத்துக்கு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தனர்.
இதன் பின்னர் இரு வீட்டாரின் சம்மதத்துடன் ஒடிசாவின் புவனேஷ்வரில் உள்ள திருமண மண்டபத்தில் பாசுதேவ்- மேகா திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக, மேளதாள வாத்தியங்கள் முழங்க மணமக்கள் இருவரும் மண்டபத்திற்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். அப்போது திருநங்கைகள் நடனமாடி மகிழ்ந்தனர்.
திருநங்கைகளுக்கு போதிய அங்கீகாரம் கிடைக்கப்படாத சமூகத்தில் திருநங்கையை இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்டது, அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Congrats
ReplyDeleteTnq
ReplyDeleteCongrats
ReplyDelete