தை
பிறந்தால் வழிபிறக்கும் என்பது போல, தை மாதம் பிறந்துள்ள நிலையில், பிளஸ் 2
மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் கொண்டு வர வழி பிறக்குமா என, மாணவர்கள்
எதிர்பார்த்துள்ளனர்.
நாடு முழுவதும், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு,
உயர் கல்விக்காக
பல நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஆண்டுதோறும் புதிய தொழில்
நுட்பம், கண்டுபிடிப்புகள், பாடத்திட்டங்கள் மாற்றம் அடிப்படையில்,
நுழைவுத் தேர்வுகளின் வினாத்தாள்கள் தயாரிக்கப்படுகின்றன.
மத்திய இடைநிலைக் கல்வி
வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம், ஒவ்வொரு ஆண்டும்
புதுப்பிக்கப்படுகிறது. ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட பல
மாநிலங்களிலும் பாடத்திட்டம் மாற்றப்படுகிறது. இதன் அடிப்படையில்,
வினாத்தாள்கள் தயாரிக்கப் படுவதால், நுழைவுத் தேர்வுகளில், ஆந்திரா மற்றும்
வட மாநில மாணவர்கள் அதிகளவில் வெற்றி பெறுகின்றனர்.ஆனால், தமிழகத்தில்,
2006 முதல் பாடத்திட்டம் மாற்றப்படவில்லை. இன்னும் பழமையான பாடத்திட்டமே
பின்பற்றப்படுவதால், நுழைவுத் தேர்வுகளில், தமிழக மாணவர்கள் பின் தங்கி
உள்ளனர். புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு, மூன்று ஆண்டுகளாக, தமிழக
அரசின் அனுமதி கிடைக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. முதல்வராக இருந்த
ஜெயலலிதா மறைந்த நிலையில், பன்னீர்செல்வம் புதிய முதல்வராக, அரசு பணிகளை
தீவிரமாக முடுக்கி விட்டுள்ளார். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல,
பாடத்திட்ட மாற்றத்திற்கான கோப்பை துாசிதட்டி, புதிய பாடத்திட்டம் கொண்டு
வர, அவர் அனுமதி அளிப்பார் என, மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...