ஜனவரி 17-ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தில்
பங்கேற்ற ஆசிரியர்களுக்கு ஒரு நாள் சம்பளம், படிகள் பிடித்தம் செய்யப்படும்
என்று ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக கவுன்சில் கூட்டத்தில்
எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய ஒரு நாள்
போராட்டத்தில் பல்கலைக்கழக ஆசிரியர்கள் பங்கேற்றனர். இதையடுத்து,
ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியம், தினப்படி அவர்களது சம்பளத்தில் இருந்து
பிடித்தம் செய்யப்படும் என்று ஆசிரியர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம்
நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக ஜேஎன்யு பதிவாளர் பிரமோத் குமார் ஆசிரியர்களுக்கு
அனுப்பியுள்ள நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாவது: ஜனவரி 17-ஆம் தேதி நடைபெற்ற
வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீது விதிகளின் கீழ்
நடவடிக்கை எடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேலைநிறுத்தப்
போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு அன்றைய தினத்திற்கான ஊதியமும்,
படிகளும் வழங்கப்படமாட்டாது என்று தெரிவித்துள்ளார். அதேபோன்று, விதிகளைப்
பின்பற்றாமல் இருந்ததாக கூறி ஐந்து பேராசிரியர்களுக்கு பல்கலைக்கழக
நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதற்கிடையே, இதுகுறித்து ஜேஎன்யு ஆசிரியர்கள் சங்கத்தின்
தலைவர் அஜய் பட்னாய்க் கூறுகையில், "ஆசிரியர்களுக்கான ஊதியத்தை பிடித்தம்
செய்வது என்பது மற்றொரு அச்சுறுத்தலாகும். மாணவர்கள் மத்தியில் பேசியதற்காக
ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தற்போது ஊதியத்தை பிடித்து
மிரட்டுகின்றனர். பல்கலைக்கழக நிர்வாகம் குறிப்பிட்டிருப்பது போல
ஆசிரியர்களுக்கான நடத்தை விதிகள் மத்திய குடிமைப் பணியின் (சிசிஎஸ்) கீழ்
வராது' என்றார்.
இதற்கிடையே, பல்கலைக்கழக நிர்வாகம் இதை மறுத்துள்ளது. "பல்கலைக்கழகத்திற்கென சொந்தமாக விதிகள் ஏதும் இல்லாத பட்சத்தில், மத்திய அரசு விதிகள் பொருந்தும்' என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, பல்கலைக்கழக நிர்வாகம் இதை மறுத்துள்ளது. "பல்கலைக்கழகத்திற்கென சொந்தமாக விதிகள் ஏதும் இல்லாத பட்சத்தில், மத்திய அரசு விதிகள் பொருந்தும்' என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...