உலகுக்கே எடுத்துக்காட்டாய் அமைதியாக போராடுபவன்... கலவரம், வன்முறையின்றி ஒன்று கூடிய இளைஞர்கள்:பாரம்பரியத்தை நோக்கி ஒற்றுமையுடன் வீர பயணம்
'உலகுக்கே எடுத்துக்காட்டாய், அமைதியாக போராடத் தெரிந்தவன் தமிழன்' என்ற
நற்பெயரை, ஜல்லிக்கட்டு போராட்டம், ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்திற்கும்
பெற்று தந்துள்ளது. கலவரம், வன்முறையின்றி, பாரம்பரியத்தை காக்க,
ஒற்றுமையுடன் ஒன்றுகூடிய இளைஞர்களின் வீரப் பயணம், மூன்றாவது நாளை கடந்து,
இன்றும் தொடர்கிறது.
உச்ச நீதிமன்ற உத்தரவால், தமிழகத்தில், ஜல்லிக்கட்டு நடத்த தடை உள்ளது. அதை
நீக்கக் கோரியும், தடைக்கு காரணமான, 'பீட்டா' விலங்குகள் நல அமைப்பை தடை
செய்யக் கோரியும், மதுரையில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் போராட்டத்தில்
ஈடுபட்டனர்.
அவர்களுக்கு ஆதரவாக, சென்னை, மெரினா வில், 17ம் தேதி, மாணவர்கள் போராட்
டத்தில் குதித்தனர். அதையடுத்து, மாணவியர், இளைஞர்கள், பெண்கள் என, அனைத்து
தரப்பி னரும், மெரினாவில் திரண்டனர். இரவு, பகல் என, மூன்றாவது நாளாக,
நேற்றும் இந்த போராட்டம் அமைதி வழியில் தொடர்ந்தது.
இது குறித்து, சென்னை போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
சென்னை, மெரினா கடற்கரை சாலை வழி யாகத் தான் முதல்வர், அமைச்சர்கள், உயரதி
காரிகள், தலைமைச் செயலகமும்; நீதிபதிகள், உயர் நீதிமன்றத்துக்கும் செல்வர்.
இதனால், அந்தசாலையில், 10 பேர் கும்பலாக நிற்க அனு மதி கிடையாது. இங்கு,
17ம் தேதி காலையில் இருந்து, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, மாணவர்கள்
போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...