பொது வினியோகத்துறை மூலம் வழங்கப்படும் சர்க்கரைக்கான மானியத்தை ரத்து செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ள தாக தெரிகிறது.
மாநில அரசுகள், சர்க்கரையை, சந்தையில் வாங்கி, அதை மக்களுக்கு, பொது வினியோகத் துறை மூலம், ஒரு கிலோ, 13.5 ரூபாய்க்கு வழங்கி
வருகிறது. இதற்காக, மாநில அரசு களுக்கு, மத்திய அரசு, ஒரு கிலோவுக்கு, 18.5 ரூபாய், மானியமாக வழங்கி வருகிறது.
ரூ.4,500 கோடி
இதனால், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு, 4,500
கோடி ரூபாய் செலவாகிறது.இந்நிலையில், மாநில அரசுகளுக்கு வழங்கப்படும், சர்க்கரைக்கான மானியத்தை ரத்து செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 2017 - 18ம் ஆண்டுக் கான மத்திய பட்ஜெட், பிப்., 1ம் தேதிதாக்கல் செய்யப்பட உள்ளது.
இதில் சர்க்கரைக்கான மானியத்தை ரத்து செய்வ தாக, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி அறிவிப்பார் என, தெரிய வந்துள்ளது.இது பற்றி மத்திய நிதியமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், 'புதிய உணவு சட்டத்தில், வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள் யார் என, வரையறை செய்யப்பட வில்லை.
அதனால், மானிய சர்க்கரையை, வேறு திட்டத்துக்கு, மாநில அரசுகள், பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. அதனால், சர்க்கரைக்கு வழங்கப்படும் மானியத்தைரத்து செய்வது பற்றி, ஆலோசித்து வருகிறோம்' என்றன.
உணவு அமைச்சர் எதிர்ப்பு
மத்திய அரசின் இந்த முடிவுக்கு, மத்திய உணவு அமைச்சர், ராம் விலாஸ் பஸ்வான் எதிர்ப்பு
தெரிவித்து உள்ளார். நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு, பஸ்வான் எழுதியுள்ள கடிதத்தில், 'சர்க்கரைக்கு வழங்கப்படும் மானியத்தை ஒட்டு மொத்தமாக நிறுத்தக் கூடாது. அந்தோத்யா அன்னா யோஜனா திட்டத்தின் கீழ் பயன்பெறும் மிக ஏழ்மையான குடும்பங் களுக்கு வழங்கப்படும் சர்க்கரைக்கு, மானியம் வழங்கப்பட வேண்டும்' என, கேட்டுக் கொண்டுள்ளார்.
சர்க்கரைக்கு மானியம் ரத்து செய்யப்படுவ தால், பொது வினியோக முறையில் சர்க்கரை விற்க்கப்படுமா என சந்தேகம் எழுந்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...