சிறுதொழிலாளர்களுக்கு உதவும் வகையில் ’மை பிசினஸ்’ என்ற வசதியை கூகுள் நிறுவன சி.இ.ஒ.
சுந்தர் பிச்சை வெளியிட்டுள்ளார்.
நேற்று டெல்லியில் சிறு தொழில் நிறுவனங்களுக்கான முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்ட சுந்தர் பிச்சை இந்த புதிய வசதியை
வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், ‘சிறு மற்றும் குறு நிறுவனங்கள் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கின்றன. இந்தியாவின் அடுத்தகட்ட வளர்ச்சி இந்த நிறுவனங்களில்தான் இருக்கிறது. நாட்டில் உள்ள 51 மில்லியன் சிறு தொழிலாளர்களை கருத்தில் கொண்டே இந்த கருவியை வெளியிட்டுள்ளோம். இந்தியாவில் தொடங்கிய இந்த வசதி மேலும் பல நாடுகளில் தொடங்கப்படும்.

இந்த “MY BUISSNESS” கருவியை முதலில் இந்தியாவிலேயே வெளியிட்டுள்ளோம். இந்த கருவி ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் சிறு, குறு தொழிலாளர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். அவர்கள் தங்களது தொழிலுக்கான வலைதளத்தை இந்த கருவியின் மூலமாக உருவாக்கலாம். இதனால் அவர்களது தொழிலை மேம்படுத்தி விரிவுபடுத்த இயலும். மேலும் FICCI மற்றும் இந்திய வார்த்தக நிறுவனம் மூலம் “DIGITAL UNLOCKED” என்னும் கருவியை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் சிறுதொழிலாலர்களுக்கு வணிகம் குறித்த செய்திகள், முக்கியமான தகவல்களைப் பெற்று கற்றுக்கொள்ளலாம்’ என்று தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...