வங்கிகளிடமிருந்து கடன் வாங்கிவிட்டு தப்பிச்சென்றதாக தன்மீது
குற்றஞ்சாட்டப்படுவது முறையல்ல என்றும், தான் ஒருபோதும் வங்கிகளில் கடன்
வாங்கவேயில்லை என்றும் விஜய் மல்லையா தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி
வெளியிட்டுள்ளார்.
கிங்ஃபிஷர் நிறுவனத்தின் உரிமையாளரான, தொழிலதிபர் விஜய் மல்லையா ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட இந்திய வங்கிகளிடம் ரூ.9,000 கோடிக்கு மேல் கடனாகப் பெற்று திருப்பிச் செலுத்தாமல் கடந்த 2016ஆம் ஆண்டின் மார்ச் மாதம் இங்கிலாந்து சென்றுவிட்டர். அவர்மீது அமலாக்கப்பிரிவு மற்றும் சி.பி.ஐ. சார்பில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் அவரை இந்தியா கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இதுகுறித்து விஜய் மல்லையா தனது ட்விட்டர் பக்கத்தில், ’நான் எந்த தவறும் செய்யவில்லை. மீடியாக்கள்தான் என்னை குற்றவாளி ஆக்குகின்றன. நான் எந்த வங்கியிலும் கடன் வாங்கிவிட்டு தப்பிச் செல்லவில்லை’ என்று பதிவிட்டுள்ளார். மல்லையாவின் இந்த பதிவுக்கு ட்விட்டரில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. மல்லையாவின் ட்வீட்டுக்கு பதிலளித்த முகேஷ் என்பவர், ‘எனக்கு உங்களது வழக்கறிஞர்களை மிகவும் பிடித்திருக்கிறது. ஏனெனில், உங்களை இவ்வாறு பேசுவதற்கு அழகாக பயிற்றுவித்துள்ளனர்’ என்று பதிலளித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...