அடுத்த ஆண்டு, மாணவர் சேர்க்கைக்கு, இன்ஜினியரிங் கல்லுாரிகள் அங்கீகாரம்
பெற, நாளை முதல் விண்ணப்பிக்கலாம்' என, மத்திய அரசின் கல்வி கவுன்சில்
அறிவித்துள்ளது.நாட்டில் உள்ள, தொழில்நுட்ப கல்லுாரிகள் எல்லாம், மத்திய
அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான,
ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரம் பெற்று இயங்குகின்றன.
இதன்படி, தமிழகத்தில், 550 இன்ஜி., கல்லுாரிகள், 60
மேலாண் நிர்வாக கல்லுாரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லுாரிகள், அடுத்த
கல்வி ஆண்டு, மாணவர்கள் சேர்க்கைக்கு அங்கீகாரம் பெற வேண்டும். இதற்கு,
நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
'புதிய நிறுவனங்கள், பிப்., 4 வரையும், பழைய நிறுவனங்கள் அங்கீகார
நீட்டிப்புக்காக, பிப்., 9 வரையும் விண்ணப்பிக்கலாம்' என, ஏ.ஐ.சி.டி.இ.,
அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...