மதுரை காமராஜ் பல்கலை புதிய துணைவேந்தர் தேர்வுக்கான விளம்பர
அறிவிப்பில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை, முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என
பேராசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஒன்றரை ஆண்டுகளாக, இப்பல்கலையில் துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளது.
தற்போது பேராசிரியர் முருகதாஸ் தலைமையிலான தேர்வுக் குழு புதிய துணைவேந்தர்
தேர்வுக்கான விண்ணப்ப படிவத்தை வெளியிட்டுள்ளது.
அதில் 10 ஆண்டுகள் பல்கலை பேராசிரியராக பணி அனுபவம்
உள்ளவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இணை பேராசிரியர், கல்லுாரி
முதல்வர்கள் விண்ணப்பிக்க முடியாது என சர்ச்சை எழுந்துள்ளது. இதனால், எந்த
தகுதி அடிப்படையில் விண்ணப்பிப்பது என பேராசிரியர்களிடையே குழப்பம்
ஏற்பட்டுள்ளது.இதற்கு துணைவேந்தர் தேர்வுக் குழுவும், உயர்கல்வித்துறையும்
முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பேராசிரியர்கள்
வலியுறுத்துகின்றனர்.இச்சர்ச்சை குறித்து உயர்கல்வி அதிகாரி ஒருவர்
கூறியதாவது:இப்பல்கலைக்கு, புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய மத்திய மனிதவள
மேம்பாட்டுத் துறை யு.ஜி.சி., மூலம் பரிந்துரை செய்த விண்ணப்ப படிவத்தை
தமிழக அரசு அனுமதித்த பின் தான் தேர்வுக் குழு வெளியிட்டது.அதில்,
விண்ணப்பிக்க தகுதியாக, '10 ஆண்டுகள் பேராசிரியர் பணி அனுபவம் அல்லது
அதற்கு இணையான தகுதி' என்று தான் குறிப்பிட்டுள்ளது. அதேநேரம் தகுதியுள்ள
இணை பேராசிரியர்கள் விண்ணப்பிக்க கூடாது என்பது குறித்து எந்த அறிவிப்பும்
இல்லை. தகுதியுள்ள இணை பேராசிரியர்கள் விண்ணப்பிக்க தடையில்லை. குழப்பம்
ஏற்படாதபட்சத்தில், பிப்., 2வது வாரத்திற்குள் மதுரை காமராஜ் பல்கலைக்கு புதிய துணைவேந்தர் நியமிக்க வாய்ப்புள்ளது என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...