தனியார் பள்ளி சங்கத்தினர் விடுமுறை
அறிவிப்பு வெளியிட்ட நிலையில், அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை விட மாவட்ட
ஆட்சியர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, அரசுத் துறை வட்டாரங்கள் கூறியது: தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் ஏதேனும் ஒரு மாவட்டத்தில் இயற்கைச் சீற்றமோ அல்லது அசாதாரண சூழ்நிலையோ ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டால் அங்கு விடுமுறை விடுவதற்கான அதிகாரம் மாவட்ட ஆட்சியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பள்ளி கல்வி இயக்ககத்தின் அனுமதியோ, தமிழக அரசின் ஆலோசனையோ கேட்க வேண்டியதில்லை. மாவட்ட நிலைமையை ஆராய்ந்து ஆட்சித் தலைவரே முடிவெடுத்து அறிவிக்கலாம் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே, ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து தமிழகம் முழுவதும் பெரும் போராட்டம் வெடித்துள்ள நிலையில்
திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ,ராமநாதபுரம், திருப்பூர் ,சிவகங்கை
உள்ளிட்டமாவட்டங்களுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...