ரஷ்யாவைச் சேர்ந்த வானியலாளர் ஒருவர் நாம் அனைவரும் ஒரு ஆபத்தான நிலையில்
இருப்பதாகவும் அடுத்த மாதம் பூமியை ஒரு மர்ம பொருள் தாக்கவுள்ளதால் சுனாமி
போன்ற பேரழிவுகள் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு நாசா ஒரு விசித்திரமான பொருளை சுற்று வட்டப்பாதையில் கண்டுள்ளது. அதன் பெயர் டபிள்யூஎப்9 என்று கூறியிருந்தது.
இது ஒரு விண்கல் அல்லது சிறுகோளாக இருக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நாசா அண்மையில் பூமியை நோக்கி ஒரு மர்மமான பொருள் வருவதாகவும், அதனால் பூமிக்கும் எந்த ஒரு பிரச்சனை இல்லை என்றும் பூமிக்கு 51 மில்லியன் கிலோ மீடார் தொலைவிலே அது கடந்து சென்றுவிடும் என தெரிவித்திருந்தது.
இந்த நிகழ்வு வரும் பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி நிகழும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில் ரஷ்யாவைச் சேர்ந்த வானியலாளர் டாக்டர்.டயோமின் தமிர் சகாரோவிச் ஒரு அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், டபிள்யூஎப் 9 என்ற அந்த மர்ம பொருள் தான் குறிப்பிட்டது போல் அதே மாதம் 16 ஆம் தேதியே பூமியை வந்து தாக்கும்.
இதனால் பூமியின் பல பகுதிகளில் சுனாமி போன்ற பேரழிவுகள் ஏற்படக்கூடும். நாம் அனைவரும் ஒரு ஆபத்தான நிலையில் இருக்கிறோம் என்று அதிர்ச்சிகர தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...