தமிழக வறட்சி நிவாரணத்துக்கு தங்கள் ஒரு நாள் ஊதியத்தை வழங்குவது என அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் சங்கங்களைக் கொண்ட ஜாக்டோ - ஜியோ அமைப்பு முடிவெடுத்துள்ளது.
தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் மற்றும் பல்வேறு அரசு ஊழி யர் சங்கங்கள், ஆசிரியர் அமைப்பு கள் இணைந்து ஜாக்டோ - ஜியோ அமைப்பாக உருவாகியுள்ளது. இதன் பிரதிநிதிகள் கூட்டம், சென்னை பல்கலைக்கழக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.இதில், ஜாக்டோ - ஜியோவின் ஒருங்கிணைப்பாளராக தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் ஜெ.கணேசன் தேர்வு செய்யப்பட்டார்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஜெ.கணேசன் கூறியதாவது:
தமிழகத்தில் அனைத்து மாவட் டங்களும் வறட்சியால் பாதிக்கப் பட்டுள்ளன. வறட்சி நிவாரணத்துக் காக ஜாக்டோ -ஜியோ சங்கங் களில் உள்ள ஊழியர்கள் தங்களது ஒருநாள் ஊதியத்தை வழங்க முடிவெடுத்துள்ளோம். இது உத்தேசமாக ரூ.40 கோடி அளவுக்கு வரும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
என்ன வாங்கி கொடுத்தீங்க?அரசிடமிருந்து உரிமைகளை கேட்டுப் பெற ஒன்றுமே செய்யாத சங்கங்களால் பயன் ஏதுமில்லை!
ReplyDelete