கலை, கல்வி, தொழில், இலக்கியம், அறிவியல், விளையாட்டு, சமூக சேவை மற்றும்
பொதுவாழ்வில் சிறப்பாகப் பங்களிப்பவர்களுக்கு பத்மஸ்ரீ விருது
வழங்கப்படுகிறது.
இந்நிலையில், பத்மஸ்ரீ விருது பெறுபவர்களின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. அதில், 91 வயதான பெண் மருத்துவர் பக்தி யாதவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியப்பிரதேசம் இந்தூரைச் சேர்ந்தவர் மருத்துவர் பக்தி யாதவ் (91). இவர் நடத்திவரும் மருத்துவமனையில் 68 ஆண்டுகளாக இலவச சிகிச்சை அளித்து வருகிறார். 1000க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவசமாக பிரசவம் பார்த்துள்ளார். இப்போது வயது ஆகிவிட்டதால், இலவச மருத்துவ ஆலோசனை மட்டும் வழங்கி வருகிறார். அவரது சேவையைப் பாராட்டி அவரை கவுரவப்படுத்தும்வகையில் மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை அளித்துள்ளது. இதன்மூலம் பத்மஸ்ரீ விருது பெறும் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...