மகளிர் கல்லூரி வளாகத்தில் மாணவிகள் செல்பி எடுக்கக்கூடாது என்று தடை
விதித்த கல்லூரிகளிடம் விளக்கம் கேட்டு, டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ்
அனுப்பியுள்ளது.
டெல்லி பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்பட்டுவரும் மகளிர் கல்லூரிகளில், மாணவிகள் வளாகத்துக்குள் 'செல்பி' எடுக்கவும், தலைமுடியை சீவவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுக்கு மறுப்புத் தெரிவித்து, கல்லூரி மாணவிகள் டெல்லி மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்றுக்கொண்ட மகளிர் ஆணையம் இதுகுறித்து 7 நாட்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் கூறியதாவது: மாணவிகள் செல்பி எடுப்பதாலும், தலைமுடியை கல்லூரி வளாகத்துக்குள் சீவுவதாலும் அவர்களின் கவனம் திசை திரும்ப வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது. இது அறிவுரை மட்டுமே-உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. மேலும் கல்லூரித் தரப்பு விளக்கத்தை மகளிர் ஆணையத்திடம் தெரிவிக்கவுள்ளதாகவும் கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.
பெண்கள் செல்பி எடுத்து, அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவது அதிகரித்து வருகிறது. இதுபோன்று நடந்துகொள்வதால் நிறையப் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுமட்டுமின்றி, மற்ற நாடுகளைவிட இந்தியாவில்தான் அதிகம்பேர் செல்பியால் இறக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...