கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர்பிச்சை அமெரிக்க அதிபரின் புதிய விசாத் தடை கொள்கையை எதிர்த்து விமர்சனம் செய்துள்ளார்.
ஈரான், இராக், சிரியா, சூடான், லிபியா,
யேமன், சோமாலியா ஆகிய 7 முஸ்லிம் நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குள்
வரமுடியாத வண்ணம் புதிய தடை உத்தரவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிறப்பித்தது
குறித்து சுந்தர்பிச்சை கூறும்போது அமெரிக்காவுக்கு சிறந்த திறன்களை கொண்டு
வருவதற்கு இது பெரிய தடை என்று கூறியுள்ளார்.
“இந்த உத்தரவின் தாக்கம் குறித்து நாங்கள்
ஏமாற்றமடைந்துள்ளோம். அமெரிக்காவுக்குள் உலகின் பெரிய திறமைகளைக் கொண்டு
வருவதற்கு இந்த உத்தரவு பெரிய தடையாக இருக்கும். இதனால் ஏற்படும் விளைவுகள்
வலியை ஏற்படுத்துகிறது, இந்தத் தடையினால் 187 கூகுள் ஊழியர்கள்
பாதிக்கப்படுவார்கள் என்று பிச்சையின் மின்னஞ்சலை மேற்கோள் காட்டி
வால்ஸ்ட்ரீட் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து வெளிநாடுகளில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான பணியாளர்களை அமெரிக்காவுக்குத் திரும்புமாறு கூகுள் அறிவுறுத்தியுள்ளது.
சுந்தர்பிச்சை மேலும் கூறும்போது, “எங்கள்
முதல் பணி பாதிக்கப்படும் அயல்நாட்டு கூகுள் பணியாளர்களுக்கு உதவுவதே. எனவே
வெளிநாடுகளில் இருப்பவர்கள் உதவி வேண்டுமெனில் எங்களது குளோபல்
செக்யூரிட்டி குழுவை அணுகவும், எந்த ஒருவருக்கும் இதனால் அசவுகரியமோ,
நிச்சயமின்மையோ குழப்பமோ ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. இத்தகைய
நிச்சயமின்மை தருணங்களில் நமது மதிப்பீடுகளே நமது சிறந்த வழிகாட்டி” என்று
சுந்தர்பிச்சை கூறியுள்ளார்.
அமெரிக்காவில் பணியாற்ற அனுமதிக்கப்பட்ட
கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் விமானங்களை பிடிப்பதிலிருந்து தடுக்கப்
படுகிறார்கள் என்ற செய்திகள் வருகின்றன, ஆனால் கிரீன் கார்டு
வைத்திருப்பவர்கள் இந்த தடை உத்தரவினால் பாதிக்கப்பட மாட்டார்கள்” என்று
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க்
முதலில் ட்ரம்பின் இந்த புதிய தடை உத்தரவை எதிர்த்தார், தற்போது கூகுளும்
எதிர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...