புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அதிகாம் படைத்தவர் முதல்வரா, கவர்னரா?
என்ற போட்டி வெளிப்படையாக வெடித்திருக்கும் நிலையில் ஆளுனர் கிரண்பேட்டி
புதுச்சேரி மக்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில்,
புதுச்சேரி மக்களுக்கு நான் எழுதும் முதல் கடிதம் ஆகும். இனிமேல் மாதம்
ஒருமுறை உங்களுக்கு கடிதம் எழுதலாம் என
நினைக்கின்றேன். இந்த அழகிய புதுவை யூனியன் பிரதேசத்தில் 7 மாதங்களை செலவிட்டுள்ளேன். இங்கே இல்லாவிட்டால் வேறு மாநிலத்தின் ஆளுநராக இருந்திருப்பேன்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உள்ளது.
மாநில அதிகார வரம்புக்குட்பட்டு சட்டங்களை இயற்றும் அதிகாரம் அதற்கு உள்ளது. மத்திய அரசின் சட்டத்துக்கு பங்கம் இல்லாமல் இருந்தால் நான் இதற்கு முழு ஆதரவு தருவேன். சட்டப்படி இதற்கு நான் பொறுப்பாவேன்.
மேலும் நிதி, அரசு திட்டங்கள், கொள்கை முடிவுகள் போன்றவற்றில்சட்டத்தின்படி எனக்கே இறுதி அதிகாரம் உள்ளது. நான் முழுமையாக பதில் கூற கடமைப்பட்டுள்ளேன். பிற மாநில ஆளுநர்களை போல் எனக்கு சட்டப்பாதுகாப்பு எதையும் அனுபவிக்கவில்லை. யூனியன் பிரதேசத்தின் தலைமை நிர்வாகியாக உள்ளதால் இந்நிலை உள்ளது.
கடந்த 7 மாதங்களில் தான் புதுச்சேரியில் எனது பதவிக்குட்பட்ட பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டேன். சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்தினேன். யாராக இருந்தாலும் சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்பதை உறுதி செய்தேன்.
அனைத்து துறைகள், அதிகாரிகளிடம் ஒருங்கிணைப்பை கொண்டு வர தீவிரமாக முயற்சி மேற்கொண்டேன். அதையும் தீவிரமாக மேற்கொள்வேன். இதற்கான திட்டங்கள் உள்ளன.
அரசு அதிகாரிகள் தங்கள் கடமைகளையும், பொறுப்பையும் உணர்ந்து செய்ய அவர்களை தயார் செய்தேன். பொதுமக்கள் தங்கள் குறைகளுக்கு தீர்வு காண ஏதுவாக ஆளுநர் மாளிகையின் வாசல்களை திறந்து வைத்தேன்.
ஆளுநர் மாளிகை என்பது வெறும் தபால் நிலையம் இல்லை. அது ஒரு பொறுப்பு வாய்ந்த அலுவலகமாகும். ஒவவொரு வார இறுதி நாள்களிலும் நான் அதிகாலை முதலே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வெற்றி கண்டுள்ளேன்.
என்னுடைய நடவடிக்கை என்பது ஒருவரை தண்டிக்க அல்ல. ஊக்குவிக்க மட்டுமே ஆகும்.
பணம் கையாள்வதில் விதிமீறல் புகார்கள் இருந்த போதும், அவற்றை வேறு திட்டங்களுக்கு முறைகேடாக செலவிடுவதை நான் அனுமதிக்கவில்லை. பொதுமக்கள் பணம் எங்கு தேவையோ அங்கு தான் செலவிட வேண்டும்.
நகர்ப்புற, கிராமப்புறங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டில் சமநிலை நிலவ வேண்டும் என்பதில் நான் தீீவிரமாக உள்ளேன். குறிப்பாக நகர்ப்புறத்துக்கு மட்டுமே அதிக நிதி ஒதுக்கீீடு உள்ளது.
எனக்கு என்று குறிப்பிட்ட பதவிக்காலம் உள்ளது. நான் வரும் 2018 மே மாதம் 29-ம தேதி பதவியை விட்டு விலகுவேன். இதுதொடர்பாக மேலிடத் தலைவர்களுக்கும் தெரிவித்து விட்டேன்.
அதுவரை நான் எனது பதவியை நேர்மையாகவும், செம்மையாகவும் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன். புதுச்சேரியை தூய்மையாகவும், பாதுகாப்பான, வளமானதாக ஆக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாகவும், தீீவிரமாகவும் உள்ளேன் என்றார் கிரண்பேடி.
பொதுமக்களுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி எழுதிய பகிரங்கக் கடிதம் புதுச்சேரி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...