நமது நாட்டில் 19-ஆம் நூற்றாண்டில் மகாராஷ்டிரத்தில் பெண் குழந்தைகள் படிப்பதற்கான பள்ளியை நிறுவி,
அதன் ஆசிரியையாக இருந்தவர் சாவித்திரிபாய் பூலே. இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை இவர் .
இந்திய விடுதலைக்கு முன்னே, அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி வேண்டும் என்று, சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் குரல் கொடுத்தவர் கோபாலகிருஷ்ண கோகலே. அதற்கும் முன்னதாக மகாராஷ்டிர மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு குறிப்பாக, பெண்கள் கல்வி பெறவேண்டும் என்பதற்காகப் பாடுபட்டவர் சமூக மறுமலர்ச்சியாளர் மகாத்மா ஜோதிபா பூலே. அவரது முயற்சிகளுக்குத் துணைநின்றவர் அவரது மனைவி சாவித்திரிபாய் பூலே. அவர்தான் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியையும்கூட.
மகாராஷ்டிர மாநிலத்தில் நைகாவ்ன் எனும் ஊரில் 1831-ஆம் ஆண்டு பிறந்த அவருக்கு பத்து வயது ஆகும்போதே 13 வயதான ஜோதிபா பூலேவுடன் திருமணம் நடந்தது. பள்ளியில் சாவித்திரிபாய் படிப்பதற்கு சமூகத்தில் எதிர்ப்புக் கிளம்பியதை அடுத்து, வீட்டிலேயே கல்வி கற்றார். பின்னர், அகமது நகரில் ஆசிரியர் பயிற்சி படிப்பைப் படித்தார்.
அதைத் தொடர்ந்து 1848-ஆம் ஆண்டில் புனேயில் உள்ள பெண்களுக்கான தொடக்கப் பள்ளி தொடங்கப்பட்டது. இந்தப் பள்ளியில் தாழ்த்தப்பட்ட குழந்தைகள் சேர்க்கப்பட்டதால், அதற்கு எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில், பள்ளியில் பாடம் நடத்தும் ஆசிரியை பொறுப்பை சாவித்திரிபாய் பூலே ஏற்றுக்கொண்டார். அவர் பள்ளிக்கு வரும் வழியில் சிலர் கேலி செய்தார்கள். சிலர் கல் வீசினார்கள். சிலர் சாணியையும் சேற்றையும் வீசினார்கள். “கடவுள் உங்களை மன்னிக்கட்டும். நான் எனது கடமையைச் செய்கிறேன், கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்” என்று கூறி, அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவார். பள்ளிக்கு வரும்போது பழைய சேலையை அணிந்து வந்து விட்டு, பிறகு பள்ளியில் வேறு சேலையை மாற்றிக்கொள்ளவேண்டிய நிலைக்கு ஆளானார்.
பள்ளியை மூடி விடவேண்டும் என்றெல்லாம் ஜோதிபா பூலேவுக்கும் சாவித்திரிபாய் பூலேவிற்கும் சிலர், கடும் நெருக்கடி கொடுத்தார்கள். பள்ளியை தொடர்ந்து நடத்துவதில் உறுதியுடன் இருந்தார்.
அவரது பிறந்தநாளில் அன்னையே வணங்குவோம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...