மதுரையில் மருந்து கடை துவங்குதல், உரிமத்தை புதுப்பித்தல் போன்றவற்றுக்கு
தரகர்கள் மூலம் லஞ்சம் பெறப்படுவதாக கடை உரிமையாளர்கள் புகார்
தெரிவிக்கின்றனர்.
மாவட்டத்தில் மருந்து கட்டுப்பாட்டு துறையின் கீழ் 1௫௦௦க்கும் மேற்பட்ட மருந்து கடைகள் உள்ளன. புதிய கடைகள் துவங்க உரிமம் வழங்குதல், ஐந்தாண்டுக்கு ஒருமுறை உரிமத்தை புதுப்பித்தல், கடைகளில் திடீர் ஆய்வு செய்தல் உள்ளிட்ட பணிகளை மருந்து கட்டுப்பாட்டு துறை செய்கிறது.
இதற்கென உதவி இயக்குனர்கள், மருந்து ஆய்வாளர்கள், பறக்கும் படை ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் உள்ளனர். இந்நிலையில், தரகர்கள் உதவியுடன் ஒவ்வொரு பணியையும் மேற்கொள்ள மருந்து கடைகளிடம் லஞ்சம் பெறப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
கடை துவங்குதல், உரிமம் புதுப்பித்தல் போன்ற பணிகளுக்கு மருந்து கட்டுப்பாட்டு துறை அலுவலகத்தில் 3 ஆயிரம் ரூபாய் டி.டி., எடுத்து கொடுத்தால் போதும். ஆனால், கடை துவங்க ௨௫ - ௩௦ ஆயிரம் ரூபாய், உரிமம் புதுப்பிக்க ௧௫ ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. ஆய்வில் சிக்கும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கவும் லஞ்சம் கொடுக்கப்படுகிறது.

லஞ்சமின்றி வேலை நடக்காது மருந்து கடை உரிமையாளர் ஒருவர் கூறியதாவது: கடை துவக்குதல், உரிமம் புதுப்பித்தல் போன்ற பணிகளுக்காக மருந்துக் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு சென்றால், அங்குள்ள சில அதிகாரிகள் தரகரின் அலைபேசி எண்ணை கொடுத்து பேசுமாறு கூறுகின்றனர். பின்னர், கடை உரிமையாளரிடம் தரகர் பேரம் பேசி வேலையில் ஈடுபடுகிறார். லஞ்சம் தர மறுத்தால், மாதக்கணக்கில் அலைந்தாலும் வேலை நடப்பதில்லை, என்றார்.
விதிமீறல் கூட்டணி மருந்து கடை துவக்க, குறைந்தது ௧௧௦ சதுர அடி அறை இருக்க வேண்டும். 'ஏசி' , அலமாரி உள்ளிட்ட வசதிகளுடன் பார்மஸிஸ்ட் ஒருவரும் இருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான கடைகள் இவ்விதிகளை மதிப்பதில்லை. இதை
அதிகாரிகள், தரகர்கள் தங்களுக்கு சாதகமாக்கி கொண்டு லஞ்சம் வாங்குகின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...