பிரதமர் நரேந்திர மோடி டிவி வாயிலாக
இன்று இரவு நாட்டுமக்களுக்கு ஆற்றிய
உரையின்போது பல்வேறு பிரிவு மக்களுக்கும்
பல சலுகைகளை அறிவித்தார். அப்போது முதியோர் மற்றும் விவசாயிகள் குறித்து அவர் குறிப்பிட்டு பேசியதாவது:
மூத்த குடிமக்களின், 7.5 லட்சம் வரையிலான வங்கி
டெபாசிட்டுகளுக்கு 8 சதவீத வட்டி வழங்கப்படும்.
அதிகபட்சம் 10 வருடங்களுக்கு இச்சலுகை தரப்படும். இந்த வட்டி மாதந்தோறும்
வழங்கப்படும் என்பது சிறப்பு.
அடுத்த
மூன்று மாதங்களில் 3 கோடி கிசான் கிரெடிட்
கார்டுகள் ருபே கிரெடிட் கார்டுகளாக
மாற்றம் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
முன்பெல்லாம்
விவசாயிகள் வங்கிகளுக்கு சென்று பணத்தை எடுக்க
வேண்டும். ருபே கார்டுகள் மூலம்,
அவர்கள் எங்கிருந்தாலும், பொருட்களை வாங்கவோ, விற்கவோ முடியும்.
மாவட்ட
கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க கூட்டுறவு
வங்கிகளில் ரஃபி பருவத்திற்காக கடன்
வாங்கியிருந்த விவசாயிகளுக்கு 60 நாட்களுக்கான (2 மாதங்கள்) வட்டியை மத்திய அரசே
செலுத்தும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...