தமிழகம் முழுவதும் கிராமப்புற மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை
ஏற்படுத்தவும், அவர்களுக்குள் புதைந்து கிடக்கும் வித்தியாசமான
கண்ணோட்டத்தை செயல்படுத்தவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இதன் ஒருபகுதியாக அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம்
மூலம் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.இதில்
ஒவ்வொரு அரசு பள்ளியில் இருந்தும் 2 மாணவர்கள் கலந்து கொள்ளலாம். எளிய
பொருட்களை வைத்து அறிவியல் உருவாக்கங்களை செய்து காண்பிக்க வேண்டும். முதல்
3 இடங்களை பெறும் அணிக்கு தலா 1,500, 1,000, 500 பரிசு வழங்கப்படும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...