உதவி பேராசிரியர் பணிக்கான, 'செட்' தகுதி தேர்வை நடத்த, புதிய
கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது.
அதன் தலைவராக, தெரசா பல்கலை துணைவேந்தர்
வள்ளி நியமிக்கப்பட்டு உள்ளார்.அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் உதவி பேராசிரியராக சேர,
முதுநிலை பட்டம் முடித்தவர்கள், பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பு
முடித்திருக்க வேண்டும். இல்லையென்றால், மத்திய அரசின், 'நெட்' தகுதி
தேர்வு அல்லது மாநில அரசுகள் நடத்தும், 'செட்' தகுதி தேர்வில், தேர்ச்சி
பெற வேண்டும். நெட் தேர்வு, ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடத்தப்படுகிறது.
அதில் தேர்ச்சி பெற்றால், நாடு முழுவதும் உள்ள எந்த கல்லுாரி,
பல்கலையிலும், உதவி பேராசிரியராக பணியில் சேரலாம். மாநில அரசு நடத்தும்
செட் தேர்வு, ஆங்கிலம் மற்றும் மாநில மொழியில் நடத்தப்படுகிறது. அதில்
தேர்ச்சி பெற்றால், அந்தந்த மாநிலங்களில் மட்டுமே உதவி பேராசிரியராக சேர
முடியும். கடந்த ஆண்டு செட் தேர்வை, அரசின் சார்பில், கொடைக்கானல் தெரசா
பல்கலை நடத்தியது. ஜன., 20ல் அறிவிப்பு வெளியிட்டு, பிப்., 22ல் தேர்வு
நடந்தது. இதன் முடிவுகள், அக்டோபரில் வெளியிடப்பட்டன. இந்த ஆண்டு செட்
தேர்வை நடத்துவதற்கு, தெரசா பல்கலை துணை வேந்தர் வள்ளி தலைமையில், புதிய
கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
உறுப்பினர் செயலராக, தெரசா பல்கலை பதிவாளர் கீதா, தேர்வு
கட்டுப்பாட்டு அதிகாரியாக விமலா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
உறுப்பினர்களாக, சேலம் பெரியார் பல்கலை துணை வேந்தர் சுவாமிநாதன் மற்றும்
திருவள்ளுவர் பல்கலை துணைவேந்தர் முருகன் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த
ஆண்டுக்கான செட் தேர்வு தேதி, பிப்., முதல் வாரத்தில் அதிகாரபூர்வமாக
அறிவிக்கப்பட உள்ளது.
Pls send maths syllabus a d .model question paper..to arivu8421@gmail.com the
ReplyDelete