Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

காஸ் சிலிண்டர் விலை உயர்வு!!

மத்திய அரசு வர்த்தக காஸ் சிலிண்டர்களுக்கு மானியம் வழங்காததால், அதன் விலையை ஒவ்வொரு மாதமும் எண்ணெய் நிறுவன கூட்டமைப்பு நிர்ணயம் செய்து அறிவிக்கிறது. எனவே மாதந்தோறும் வர்த்தக காஸ் சிலிண்டர் விலையில் ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. இதன் விளைவாக வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.2 அதிகரித்துள்ளது.

அதேபோல வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நடப்பு மாதத்திற்கு ரூ.1.50 அதிகரித்து, ரூ.1,203 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் ரூ.1,343க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், பிப்ரவரியில் ரூ.166 குறைந்து ரூ.1,177ஆக இருந்தது. இது மார்ச் மாதத்தில் ரூ.1,066.50 ஆகவும், ஏப்ரலில் ரூ.1,060 ஆகவும், மே மாதம் ரூ.1,078.50 ஆகவும், ஜூன் மாதம் ரூ.1,117 ஆகவும், ஜூலையில் ரூ.1,102.50ஆகவும், ஆகஸ்டில் ரூ.1,002.50 ஆகவும், செப்டம்பரில் ரூ.966 ஆகவும், அக்டோபரில் ரூ.1,017 ஆகவும், நவம்பரில் ரூ.1,107 ஆகவும் இருந்தது.

இது கடந்த மாதம் (டிசம்பர்) ரூ.94.50 அதிகரித்து, ரூ.1,201.50 ஆக இருந்தது. நடப்பு மாதத்திற்கு (ஜனவரி), இதன் விலை மேலும் ரூ.1.50 அதிகரித்து ரூ.1,203 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மானியமில்லா சிலிண்டர் கடந்த மாதம் ரூ.614.50க்கு விற்கப்பட்ட நிலையில், நடப்பு மாதம் ரூ.2 அதிகரித்து, ரூ.616.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive