பாராலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு,
கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, பாடகர் கே.ஜே. யேசுதாஸ், அரசியல் கட்சித்
தலைவர்கள் சரத் பவார், முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் பத்ம விருதுகளுக்கு
தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டின் சிறந்த குடிமக்களை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசால் வழங்கப்படும் பத்ம விருதுகள் இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், பத்ம விருதுகள் பெரும் 20 பேர் கொண்ட பட்டியல் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
அதன்படி, பாராலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன், ஒலிம்பிக்கில் பங்கேற்ற மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், பாராலிம்பிக் குண்டு எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற தீபா மாலிக், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மகர், வட்டு எறியும் வீரர் விகாஸ் கௌடா, ஹாக்கி வீரர் பி.ஆர். ஸ்ரீஜேஷ், இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, மாற்றுத் திறனாளிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷேகர் நாயக் உள்ளிட்ட விளையாட்டு வீரர்களுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வரிசையில், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்படுகிறது.
காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மறைந்த முஃப்தி முகம்மது சயீத், முன்னாள் சபாநாயாகர் பி.ஏ. சங்மா, மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த சுந்தர் லால் படவ் ஆகியோருக்கும் பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட உள்ளது.
திரையிசைப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், இசைக் கலைஞர் விஷ்வா மோகன் பட், பாடகர் அனுராதா பட்வால் ஆகியோரும் பத்மஸ்ரீ விருதுகளை பெறுகிறார்கள்.
எய்ட்ஸ் ஆராய்ச்சி மருத்துவர் சுனிதி சாலமன், இசைக் கலைஞர் இம்ராத் கான் ஆகியோர் வெளிநாடு வாழ் இந்தியர்களாவர். இவர்களுக்கும், சமூக சேவைக்காக நேபாளத்தைச் சேர்ந்த அனுராதா கொய்ராலாவுக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...