அமெரிக்காவில் உள்ள லைப்ரரி ஆஃப் காங்கிரஸ் பல்கலைக்கழகத்தில் 4 வயதான
சிறுமி நூலகராக ஒரு நாள் பணியாற்றியுள்ளார்.
ஜார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்த
டாலியா அராணா எனும் சிறுமி, உலகின் மிகப்பெரிய நூலகமான அமெரிக்கா லைப்ரரி
ஆஃப் காங்கிரஸ் நூலகத்தின் நூலகராக கடந்த ஜனவரி 11ஆம் தேதி ஒரு நாள் பதவி
வகித்தார்.
அராணா இரண்டு வயது முதலே புத்தகம் வாசிப்பதை ஆர்வமாகக் கொண்டிருக்கிறார்.
இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை வாசித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, தனக்குத் தேவையான புத்தகங்களை தேடித்தேடி வாசிப்பதை
வழக்கமாக வைத்திருக்கிறார். கல்லூரி அளவிலான புத்தகங்களையும் வாசிக்கும்
அளவுக்கு திறன் பெற்றிருக்கிறார். மேலும் நூலகராகப் பதவி வகித்த தினத்தில்
நூலகத்தில் பணிபுரியும் இதர ஊழியர்களுடன் கலந்துரையாடிய அராணா, குழந்தைகள்
எழுதிப் பழகும் நோக்கில் ஒவ்வொரு வீட்டின் சுவரிலும் வெள்ளை நிறப் பலகையை
வைக்கவும் எனத் தெரிவித்தார்.
இந்த நூலகத்தின் முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க நூலகரான கர்லா ஹைடன் பணிபுரிந்து வருகிறார். அவருடன் இணைந்தே ஒரு நாள் நூலகராகப் பணியாற்றினார். இதுகுறித்து கர்லா ஹைடன் ட்விட்டர் பதிவில், அராணாவுடன் பணியாற்றியது சிறப்பான அனுபவம் எனக் குறிப்பிட்டு புகைப்படத்தையும் பதிவிட்டார். உலகின் மிகப்பெரிய நூலகத்தின் நூலகராக 4 வயது சிறுமி ஒரு நாள் பணியாற்றியது இதுவே முதல்முறை. இந்தச் சிறுமியின் மூளை 11 முதல் 15 வயதுக்கு உண்டான முதிர்ச்சியோடு செயலிலும் வேகத்திலும் இயங்குகிறது என மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...