'எம்.பி.பி.எஸ்.,
- பி.டி.எஸ்., படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு தேதி, நாளை
அறிவிக்கப்படும்' என, தகவல்கள் வெளியாகி உள்ளன. 'மருத்துவப் படிப்புகளில்
சேர, நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்' என, உச்ச நீதிமன்றம்
உத்தரவிட்டு உள்ளது. இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில், மத்திய இடைநிலை
கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., மூலம், நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
கடந்த ஆண்டு, தமிழக அரசின் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டும், நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், தனியார் கல்லுாரிகளில், நீட் அடிப்படையில் மட்டுமே, மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இந்த ஆண்டு நீட் தேர்வில், தமிழகத்திற்கு விதி விலக்கு அளிக்கப்படாது என, தகவல்கள் வெளியாகி உள்ளன. அனைவரும் நீட் தேர்வை எழுத வேண்டும் என, கூறப்படுகிறது. இது குறித்து, இந்திய மருத்துவ கவுன்சில் அமைப்போ, சுகாதாரத் துறையோ, தெளிவான அறிவிப்பு வெளியிடவில்லை. இந்நிலையில், வரும் கல்வி ஆண்டில், மாணவர்கள் சேர்க்கைக்கான, நீட் நுழைவுத் தேர்வு, மே, 7ல் நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, நாளை மறுநாள் துவங்கலாம் என்றும், அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு, நாளை வெளியாகும் என்றும், தகவல்கள் வெளியாகி உள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...