இந்தியாவில் அனைத்து வித மொபைல் வேலெட் அல்லது இ-வேலெட் சேவைகளை பயன்படுத்துவது எப்படி என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
புதுடெல்லி:
இந்தியாவில் கருப்பு பணம் ஒழிப்பு என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளின் காரணமாக ஏற்பட்டுள்ள பண தட்டுப்பாடு பல வாரங்களாக நீடித்து வருகிறது. இன்றளவும் பணத்தை பெற நீண்ட வரிசை, மற்றும் போதிய பணம் கிடைக்காதது உள்ளிட்ட பிரச்சனைகள் நாடு முழுக்க இருந்து வருகிறது.
இது போன்ற பிரச்சனைகளால் மக்கள் தங்களின் பணத்தை ஆன்லைன் மூலம் செலவழிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதனால் பலரும் இ-வேலெட் மூலம் தங்களுக்கு வேண்டிய சேவைகளை பெற்று வரும் நிலையில் அவற்றின் பயன்பாடு நாடு முழுக்க பெருமளவு அதிகரித்து உள்ளது.
இண்டர்நெட் மூலம் ஆன்லைனில் அதிகளவு பண பரிமாற்றம் செய்யப்படும் நிலையில் பலரும் இ-வேலெட்களை பயன்படுத்த தெரியாமல் உள்ளனர். அவர்கள் இ-வேலெட் சேவைகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
மொபைல் வேலெட் அல்லது இ-வேலெட் என்றால் என்ன?
மொபைல் அல்லது இ-வேலெட் என்பது நீங்கள் கையில் வைத்திருக்கும் பண பை (மணி பர்ஸ்) போன்றதாகும். மொபைல் அல்லது இ-வேலெட்களை டிஜிட்டல் முறையில் பயன்படுத்துகிறோம். இவற்றில் உங்களின் பணத்தை வைத்து கொண்டு விற்பனையாளர்களிடம் இருந்து பொருட்களை வாங்க முடியும். இதில் உங்களின் வங்கி கார்டு தகவல்கள், கிரெடிட் அல்லது டெபிட் கார்டு போன்றவற்றை சேமித்து வைத்து கொள்ளலாம். இதனால் பணமில்லா பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.
மொபைல் அல்லது இ-வேலெட் மூலம் மொபைல் போன் ரீசார்ஜ், பயணச்சீ்ட்டு முன்பதிவுகள், ஆன்லைன் ஷாப்பிங் உள்ளிட்டவற்றை கையில் பணம் இல்லாமலேயே மேற்கொள்ள முடியும்.
மொபைல் வேலெட் சேவையை வழங்க பல்வேறு செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது. இவற்றை உங்களின் ஸ்மார்ட்போனில் டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம்.
மொபைல் அல்லது இ-வேலெட் சேவைகளை பயபன்டுத்துது எப்படி?
ஃபேஸ்புக் அல்லது ஜிமெயில் சேவைகளை பயன்படுத்துவதை போன்று மொபைல் வேலெட்களும் மிகவும் எளிமையாக பயன்படுத்த கூடியதாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. சமூக வலைத்தள கணக்குகளை இ-வேலெட் ஆப்களுடன் இணைத்து அவற்றை பயன்படுத்த முடியும். ஒருவேளை சமூக வலைத்தள சேவைகள் பயன்படுத்தவில்லை எனில் இ-வேலெட் சேவைகளுக்கென தனி கணக்கு ஒன்றை உருவாக்கி கொள்ளலாம்.
கணக்கை துவங்கியதும், நீங்கள் துவங்கிய சேவையின் சார்பில் உங்களின் பணத்தை வேலெட்டில் சேர்க்க சொல்லும். உங்களின் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் சேவைகளை பயன்படுத்தி இ-வேலெட்களில் பணத்தை சேர்த்து கொள்ளலாம்.
மொபைல் வேலெட் சேவைகளை பயன்படுத்த மற்றுமோர் வழியும் உள்ளது. மொபைல் அல்லது இ-வேலெட் சேவைகளில் உங்களது பணத்தை சேர்க்க வில்லை என்றால் இ-வேலெட் மூலம் நீங்கள் பயன்படுத்தும் சேவைகளுக்கு டெபிட் / கிரெடிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் சேவைகளை பயன்படுத்தி பணம் செலுத்த முடியும்.
மொபைல் அல்லது இ-வேலெட் மூலம் என்ன செய்ய முடியும்?
மொபைல் வேலெட் சேவைகளின் அடிப்படை சேவை மொபைல் போன்களுக்கு ரீசார்ஜ் செய்வதே ஆகும். உங்களின் மொபைல் போன் ரீசார்ஜ், மொபைல் பில் உள்ளிட்டவற்றை செலுத்த முடியும். பெரும்பாலான சேவைகளில் டிடிஎச், டேட்டா கார்டு ரீசார்ஜ், பிராட்பேன்ட் அல்லது லேண்ட்லைன் பில் உள்ளிட்டவைகளை செலுத்த முடியும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...