கல்வியாண்டின் துவக்கத்தில் வழங்க வேண்டிய,
பங்குச்சந்தை பாட புத்தகங்களை, இறுதி தேர்வு நெருங்கும் நிலையில்
அதிகாரிகள் வழங்கியது, ஆசிரியர்கள், மாணவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி
உள்ளது.
மத்திய அரசின் தேசிய பங்குச்சந்தை நிறுவனம், மாணவர்களுக்கு நிதி மற்றும் பங்குச்சந்தை குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த, கூடுதல் பாடம் நடத்துமாறு, மாநிலங்களை வலியுறுத்தியது. இதற்கான பாட புத்தகங்களை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி கவுன்சில் மூலமாக, இலவசமாக வழங்குகிறது.
தமிழகத்தில், எட்டு,
ஒன்பது மற்றும் பிளஸ் 1ல் வணிகவியல், பொருளியல் வகுப்புகளுக்கு,
பங்குச்சந்தை விழிப்புணர்வு பாடங்கள் நடத்தப்படுகின்றன. பாட புத்தகங்கள்,
கல்வியாண்டின் துவக்கத்தில் வழங்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்படும்.
அரையாண்டு தேர்வுக்கு பின், திருப்புதல் தேர்வுகள் மட்டுமே நடத்தப்பட்டு,
மீண்டும் ஒரு முறை பாடங்கள் நினைவூட்டப்படும். ஆனால், தமிழக பள்ளி
கல்வித்துறையில் மிக தாமதமாக, அரையாண்டு தேர்வு முடிந்த பிறகே,
பங்குச்சந்தை பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு உள்ளன. ஒன்பதாம் வகுப்பு
மற்றும் பிளஸ் 1 மாணவர்கள், அடுத்த ஆண்டு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2
பொதுத்தேர்வு எழுத உள்ளனர். அதனால், பல பள்ளிகளில், மாணவர்களின்
சந்தேகங்களை நிவர்த்தி செய்து, ஆசிரியர்கள், பாடங்களை மீண்டும் ஒரு முறை
நடத்தி வருகின்றனர். இந்நிலையில், புதிதாக கொடுத்த பங்கு சந்தை
புத்தகங்களின் பாடங்களை, எப்போது நடத்துவது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கூறுகையில்,
'பாட திட்டத்தை மாற்றுவதில், பள்ளி கல்வித்துறை பின்னடைவில் உள்ளது. பாட
புத்தகங்களை வழங்குவதிலும், இவ்வளவு மெத்தனமாக இருப்பது வருத்தமாக உள்ளது'
என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...