மதுரை காமராஜர் பல்கலைக்கழக முதுநிலைப் பட்டப்படிப்பு (சிபிஎஸ்சி) பருவமுறை நவம்பர் 2016 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
எம்.கா.ம், எம்.காம் நிதி, எம்.காம்.கணினி அப்ளிகேசன்ஸ்,
எம்.டி.எம்., எம்.எஸ்.சி கணிதம், இயற்பியல், கணினி அறிவியல், கணினி
அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம், கணினி அப்ளிகேசன், எஸ்.எஸ்.டபிள்யூ,
எம்.ஏ.ஆங்கிலம், எம்.பி.ஏ. ஆகியவற்றுக்கான தேர்வு முடிவுகளை பல்கலைக்கழக
இணையத்தில் (www.mkuniversity) பார்க்கலாம்.
மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கவிரும்புவோர் இணையம்
மூலமாகவே அதற்குரிய விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி
செய்த விண்ணப்பங்களை வரும் 19 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்வாணையர்
அலுவலகத்தில் கிடைக்குமாறு அனுப்பவேண்டும்.
மறுமதிப்பீட்டுக் கட்டணத்தை கேட்பு வரைவோலை (டிடி) ஆகவோ
அல்லது எஸ்பிஐ ஆன்லைன் பேமெண்ட் ஆகவோ மட்டுமே செலுத்த வேண்டும். தாமதமாக
வரும் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. செலுத்திய பணமும் திரும்ப
வழங்கப்படமாட்டாது என பல்கலைக்கழக தேர்வாணையர் பி.விஜயன் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...