பணமதிப்பழிப்பு அறிவிப்பைத் தொடர்ந்து கிரெடிட் கார்டு பரிவர்த்தனை 30 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக எஸ்.பி.ஐ. வங்கி தெரிவித்துள்ளது.
இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கிரெடிட் கார்டு செயல்பாட்டாளரான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ.) கார்டு தலைமைச் செயலாளர் விஜய் ஜசுஜா இதுகுறித்து கூறுகையில், ‘பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு எங்களது வங்கியின் கிரெடிட் கார்டுகள் மூலமாக செலவிடும் தொகை 25 முதல் 30 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. எனினும், நகை, பெட்ரோல் -டீசல் எரிவாயு மற்றும் விருப்புரிமை செலவுகள் குறைந்துள்ளது. வழக்கமாக எஸ்.பி.ஐ. கிரெடிட் கார்டு பரிவர்த்தனை 65 சதவிகிதமாக இருக்கும். ஆனால், மத்திய அரசின் அறிவிப்புக்குப் பிறகான 50 நாட்களில் பரிவர்த்தனை 85 சதவிகிதம் வரையில் அதிகரித்துள்ளது.
நவம்பர் மாதத் துவக்கத்தில் இருந்து கிரெடிட் கார்டுகள் மூலமாக செலவிடும் தொகை குறைவாக இருந்தது. ஆனால் மேற்கொண்ட பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. டிசம்பர் மாதத்தில் செலவிடும் தொகை மீண்டும் அதிகரித்து, 35 முதல் 50 சதவிகித உயர்வை எட்டியது. தற்போதைய நிலையில், சுமார் 47.5 லட்சம் பேர் எஸ்.பி.ஐ. கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 1,05,000 புதிய கிரெடிட் கார்டுகளை விநியோகித்துள்ளோம்’ என்று கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...