2011ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் தடுப்பு
பட்டியலில், காளைகளை அப்போதைய, மத்திய சுற்றுசூழல் மற்றும வனத்துறை
அமைச்சகம் சேர்த்தது. இதனால், ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதன்பிறகு விலங்குகள் தடுப்பு பட்டியலில் இருந்து காளைகளை நீக்கும் நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கவில்லை. இந்நிலையில், தற்போது மாநில அரசு ஒரு அவசர சட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் வழியாக குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்த சட்டத்திற்கு அனேகமாக அனுமதி கிடைத்துவிடும் என்பது மத்திய அரசின் சமிக்ஞை உணர்த்துகிறது. ஆனால் இது ஒரு தற்காலிக தீர்வுதான். காளைகளை காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் இருந்து விலக்க மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதே நிரந்தரமான தீர்வாக இருக்க முடியும்.
இக்கோரிக்கையை வலியுறுத்தியே இன்று டிவிட்டரில் என்ற பெயரில் ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது.
இப்போராட்டத்தின் வெற்றி என்பது சட்ட திருத்தத்தில்தான் அடங்கியுள்ளது. விலங்குகள் வதை தடுப்பு சட்டம் 160ல் திருத்தம் செய்வதன் மூலம் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு உரிமை தொடரும். இந்த சட்டத்தின் பிரிவு 11என், ஜல்லிக்கட்டை விலங்குகளுடனான சண்டையாக வர்ணிக்கிறது. அதை மாற்ற வேண்டும். பிரிவு 11/3 கலாசாரம் மற்றும் பாரம்பரிய நிகழ்வுகளுக்காக காளைகளை பயன்படுத்த கூடாது என கூறுகிறது. அந்த ஷரத்தை நீக்க வேண்டும்.
அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே இதை செய்ய முடியும். அதற்கான அழுத்தத்தை தமிழக எம்.பிக்கள் தொடர்ச்சியாக கொடுக்க வேண்டும். தமிழக மக்களும் தங்கள் எழுச்சி மூலம் இதையும் சாதித்து காட்ட வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...