பீட்டா அமைப்பை எதிர்த்து நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் கேள்வி
எழுப்பியுள்ளார், அதில் அமெரிக்காவில் நடைபெறும் 'புல் ரைடிங்'
விளையாட்டுகளை தடை செய்ய பீட்டா முயற்சிக்க வேண்டும் என்றும் எங்களுடைய
காளைகளை எதிர்க்கொள்ள உங்களுக்கு தகுதி கிடையாது என்றும் நடிகர் கமலஹாசன்
டிவிட்டரில் கேள்வி எழுப்பி இருந்தார்.
மேலும், இந்தியாவை விட்டு பேரரசுக்கள் வெளியேற்றப்பட்டுவிட்டது என்றும் கமல் கூறியிருந்தார். ஒவ்வொரு நாட்டிற்கு ஒவ்வொரு கொள்கையை கடைபிடிக்கும் பீட்டா அமைப்பின் இந்திய நிறுவனத்தின் தலைவர் பூர்வா ஜோஷிபுரா, கமலஹாசனின் கேள்விக்கு குழப்பி அடித்து ஒரு பதிலைக் கூறியுள்ளார். நடிகர் கமலஹாசன் கேட்ட கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்காமல் அமெரிக்காவில் நடைமுறையில் உள்ள ரோடியோ பற்றி பேசியிருக்கிறார்.
மேலும், 'பீட்டா இந்தியா' இந்தியாவை மையமாக கொண்டு செயல்படுகிறது. இங்கு விலங்குகளுக்கு உதவி செய்து வருகிறோம். ஆனால், அமெரிக்காவில் 1980 ஆண்டில் இருந்து பீட்டா செயல்பட்டு வருகிறது. அங்கு காளை சண்டைகள் சட்டவிரோதமானவை. பல்வேறு மாநிலங்களில் 'புல் ரைடிங்' சட்டத்திற்கு எதிரானது. என்று பூர்வா கூறியுள்ளார். இதுதான் கமல் கேட்ட கேள்விக்கு பதிலா என்று ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஸ்பெயின், வட அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வாய் பொத்திக் கொண்டு வேலை பார்க்கும் பீட்டா அமைப்பு இந்தியாவில் மட்டும் குறிப்பாக தமிழ்நாட்டிற்கு விரோதமாக செயல்பட்டு வருகிறது. நாட்டிற்கொரு பெயரை வைத்துக் கொண்டு அந்தந்த நாட்டு பொருளாதார, அரசியல் ஏற்றத்தாழ்வுகளுக்கு ஏற்ப செயல்பட்டு வரும் பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...