நடப்பாண்டில் இந்தியாவின் ஆயில் பயன்பாடு 7 முதல் 8 சதவிகிதம் வரையில்
அதிகரிக்கும் என்றும், இதன்மூலம் ஆயில் பயன்பாட்டில் சீனாவைவிட இந்தியா
தொடர்ந்து மூன்று வருடங்களாக முன்னிலையில் இருப்பதாக பிலாட்ஸ் நிறுவனம்
தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் நடப்பாண்டுக்கான பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு (எல்.பி.ஜி.) உள்ளிட்ட ஆயில் பயன்பாடு குறித்த ஆய்வை பிலாட்ஸ் (Platts) நிறுவனம் மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 2017ஆம் ஆண்டில் இந்தியாவின் ஆயில் பயன்பாடு நாள் ஒன்றுக்கு 4.13 மில்லியன் பேரல் என்றளவில் இருக்கும். இது 7 சதவிகித உயர்வாகும். ஆனால், சீனாவின் நடப்பாண்டுக்கான ஆயில் பயன்பாடு நாள் ஒன்றுக்கு 11.5 மில்லியன் பேரல்களாக இருக்கும். இது முந்தைய ஆண்டைவிட 3 சதவிகிம் உயர்வு ஆகும். இதன் மூலம் இந்தியா தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சீனாவின் ஆயில் பயன்பாட்டை மிஞ்சியுள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நடப்பு 2017ஆம் ஆண்டில் துவக்கத்தில் சில மாதங்களுக்கு ஆயில் பயன்பாடு குறைவாக இருக்கும். எனினும் பின்னாட்களில் ஆயில் பயன்பாடு அதிகரிக்கும். எல்.பி.ஜி. பயன்பாடு 10.5 சதவிகிதமும், டீசல் பயன்பாடு 5 சதவிகிதமும் அதிகரிக்கும் என்று பிலாட்ஸ் நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...