முன்னணி இணைய வர்த்தக நிறுவனமான அமேசான், சில நாட்களுக்குமுன் இந்திய
தேசியக் கொடி பொறித்த கால் மிதி ஒன்றை கனடா நாட்டின் இணையதளத்தில்
வெளியிட்டது. அதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கடும்
கண்டனம் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து அமேசான் நிறுவனம் இந்திய தேசியக் கொடி டிசைன் கொண்ட கால்மிதியை இணையதளத்திலிருந்து நீக்கியது.
இந்நிலையில், அமேசான் நிறுவனம் தனது அமெரிக்க இணையதளத்தில் காந்தியின் முகம்பொறித்த செருப்புகளை விற்பனைக்கு வைத்துள்ளது. அந்தச் செருப்புகளில், சிரிப்பது போன்ற காந்தியின் படம் பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்திய தேசியக் கொடி அச்சிடப்பட்ட கால் மிதி வெளியானபோது ஏற்பட்ட சர்ச்சையில் அமேசான் நிறுவனம், இந்திய கலாச்சாரத்தை நாங்கள் மதிக்கிறோம். தேசியக் கொடி பொருந்திய கால் மிதிகள் அனைத்தும் எங்களின் மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களின் விற்பனைப் பொருள். இந்திய நாட்டின் உணர்வுகளை இழிவுபடுத்தும் எண்ணம் எங்களுக்கு இல்லை எனக் கூறியது.
இந்த பிரச்னை ஓய்ந்தநிலையில், இந்திய கலாச்சாரங்களை அவமதிக்கும்விதத்தில் அமேசான் நிறுவனம் காந்தியின் முகம் பொறித்த செருப்புகளை விற்பனைக்கு கொண்டுவந்து மீண்டும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...