ஜல்லிக்கட்டு தொடர்பான அவசர சட்டத்திற்கு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஒப்புதல் அளித்துள்ளார். அவசர சட்டம் மூலம்
ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடை நீங்கியது. ஜல்லிக்கட்டு ஒப்புதலை அடுத்து
மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள்
நாளை நடைபெறுகிறது. அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தமிழக முதலமைச்சர்
ஓ.பன்னீர் செல்வம் ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்க மதுரை புறப்பட்டு
சென்றுள்ளார். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள்,
பெண்கள் தன்னெழுச்சி போரட்டாமாக எழுந்தது.*
*சென்னை, மதுரை, கோவை, நெல்லை, புதுச்சேரி என தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தது. இளைஞர்கள் போராட்டம் ஓரிரு நாளில் முடிந்து விடும் என்று நினைத்த மத்திய, மாநில அரசுகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இளைஞர்களில் அறவழி போராட்டத்தை கண்டு வியந்த மத்திய, மாநில அரசுகள் இதற்காக ஆலோசனை நடத்தியது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் டெல்லி பிரதமரை சந்தித்து மனு அளித்தார்.*
*அதற்கு பிரதமர் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்றும், ஆனால் தமிழக அரசு எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் தனது ஆதரவு இருக்கும் என்று தெரிவித்தார்.*
*இதனையடுத்து முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகியுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின் தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வருவதாக அறிவித்தது. இந்த அவசர சட்டத்திற்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. பின்னர் அங்கிருந்து அவசர சட்டவரைவை தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு ஆனுப்பப்பட்டது. இந்த அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஒப்புதல் அளித்தார்*

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...