இந்திய தர நிர்ணய ஆணையமான, பி.ஐ.எஸ்., வெளியிட்டுள்ள அறிக்கை:
தங்க நகைகளின் தரத்தை குறிப்பிடும், ‘ஹால்மார்க்’ முத்திரை தொடர்பான புதிய நடைமுறை, ஜன., 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, தங்க நகைகளின் தரம், மூன்று வகையாக பிரிக்கப்பட்டு அவற்றுக்கு, தரக் குறியீடுகள் வழங்கப்படும்.
வாடிக்கையாளர்கள், தங்க நகைகளின் தரத்தை, சுலபமாக அறிந்து கொள்ள வசதியாக, முதல் தரத்திற்கு, 916 என்ற வழக்கமான குறியீட்டுடன், தற்போது, 22 காரட் எனவும், குறிக்கப்படுகிறது. அதுபோல, 750 என்ற தரக் குறியீட்டுடன், 18 காரட் என்றும், 585 என்ற தரக் குறியீட்டுடன், 14 காரட் எனவும், தங்க நகைகளில் குறிக்கப்படும். ஆக, ஒரு, ‘ஹால்மார்க்’ தங்க நகையில், பி.ஐ.எஸ்., முத்திரை, தர முத்திரை, சான்றளிப்பு மையத்தின் முத்திரை மற்றும் விற்பனையாளரின் அடையாளம் என, நான்கு குறியீடுகள் இடம் பெற்றிருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...