கல்வி விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி
மிச்சல் ஒபாமா தமிழ் வம்சாவளி சிறுமியை தேர்வு செய்துள்ளது நெகிழ்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
மிச்சல் ஒபாமா அமெரிக்க இளம் தலைமுறையினர் இடையே கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகிறார். அந்த விழிபுணர்வு
பிரச்சாரத்திற்காக தமிழ் வஞ்சாவளி சிறுமி சுவேதா பிரபாகரன் (16) உட்பட 17 பேரை தேர்வு செய்துள்ளார். அதில், 12 உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், 5 கல்லூரி மாணவர்கள் அடங்குவர். அதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் சுவேதா மட்டுமே. ஸ்வேதா விர்ஜினியாவில் உள்ள தாமஸ் ஜெபர்சன் உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்.
சிறுமி சுவேதாவின் பெற்றொர் திருநெல்வேலியை சேர்ந்தவர்கள். கடந்த 1998 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தனர்.
சுவேதா இளையவர்களுக்கு கணிணி அறிவியல் கற்றுதருவதில் சிறந்தவராக இருந்ததால் அவர் தேர்வு கல்வி விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...