குஜராத்தை சேர்ந்த 14 வயது மாணவர் ஒருவர்கண்ணிவெடிகளை கண்டறிந்து அழிக்கும் குட்டி ட்ரோனை, உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
குஜராத்தை சேர்ந்தவர் ஹர்ஷவர்தன் ஜாலா (14). இவர் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கண்ணிவெடிகளை கண்டறிந்து அழிக்கும் ட்ரோனை உருவாக்கியுள்ளார். கடந்த ஆண்டு கண்ணிவெடியில் சிக்கி ஏராளமான ராணுவ வீரர்கள் உயிரிழப்பதுடன், கை கால்களையும் இழக்கின்றனர். இந்த செய்திகளை செய்தித்தாள்களில் படித்த பிறகு அதற்கு தீர்வு காணும் வகையில் கண்ணிவெடி கண்டுபிடிக்கும் ட்ரோன் முன்மாதிரியை உருவாக்கியுள்ளார்.
இந்த விமானத்தை இன்னும் மேம்படுத்தி பயன்படுத்துவது தொடர்பாக, ஹர்ஷவர்தன் ஜாலாவுக்கு குஜராத் மாநில அரசு 5 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது.
இதுகுறித்து ஹர்ஷவர்தன் ஜாலா, “ நான் முதலில் கண்ணிவெடியை கண்டுபிடிக்கும் ரோபோட்டை உருவாக்கினேன். அது அதிக எடை கொண்டது. திடீரென வெடிவிபத்தை ஏற்படுத்தலாம் என்னும் அபாயம் இருந்தது. எனவே, பாதுகாப்பான தூரத்தில் இருந்து கண்ணிவெடியை கண்டறியும் ட்ரோனை உருவாக்கினேன்.
இன்ஃப்ரா ரெட், ஆர்ஜிபி சென்சார், தெர்மல் மீட்டர்ருடன் இணைந்த 21-மெகாபிக்ஸல் கேமரா ட்ரோனில் பொருத்தப்பட்டுள்ளது. அந்த கேமரா மூலம் தெளிவான படங்களை எடுக்க முடியும். இந்த ட்ரோன் நிலத்திற்கு மேல் 2 அடி உயரத்தில் பறந்து கண்ணிவெடிகளை கண்டுபிடிக்கும். விமானத்துக்குள்ளிருக்கும் 50 கிராம் டெட்டனேட்டர், கண்ணிவெடி இருக்கும் இடத்தின் மீது விழுந்து அதை வெடிக்க வைத்து அழிக்கும் என தெரிவித்துள்ளார்.
இதுவரை, 3 முன்மாதிரி ட்ரோன்களை உருவாக்கியுள்ளேன் அதில் 2 ட்ரோன்களுக்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவியை என் பெற்றோர்கள் செய்தார்கள். 3வது ட்ரோன் உருவாக்க மாநில அரசு 3 லட்சம் ரூபாய் வழங்கியது. அவரின் தந்தை ப்ரத்யூமன்சின் ஜாலா ஒரு ப்ளாஸ்டிக் நிறுவணத்தில் கணக்காளராக பணிபுரிகிறார். தாய் நிஷபா ஜாலா இல்லதரசியாக உள்ளார். என்னுடைய பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் என் முயற்சிகளுக்கு எப்போதும் உறுதுணையாகவே உள்ளனர் என தெரிவித்துள்ளார். இதனால், இலக்கை நோக்கி என்னால் கவனம் செலுத்த முடிகிறது.
நான் ‘ஏரோபோட்டிக்’ என்ற நிறுவனத்தை தொடங்கி நான் கண்டுபிடித்துள்ள ட்ரோனுக்கான காப்புரிமை பெற்றுள்ளேன்.இந்த ட்ரோன் குறித்த முன்மாதிரியை அமெரிக்காவிலும் சென்று விளக்கினேன். அமெரிக்காவிலிருந்து என் நிறுவனத்திற்கு முதலீடு செய்ய முன் வருகின்றனர்.
இந்த ட்ரோனை ஒன்றை 5 லட்சத்துக்கு விற்க உள்ளேன். உலகிலேயே குறைந்த விலை ட்ரோன் இது தான். என் மாநிலத்திற்காக ஒரு ட்ரோன் 2 லட்சம் ரூபாக்கு வழங்க முடிவு செய்துள்ளேன். கூகுள் நிறுவனத்தை விட என் நிறுவனத்தை பெரியதாக வளர்க்க ஆசைப்படுகிறேன். அதற்கு கடுமையாக நான் உழைப்பேன் என தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...