தமிழக அரசு சார்பில், தமிழ் அறிஞர் விருது பெறுவோர் பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது.
முதல்வர்பன்னீர்செல்வம், நேற்று வெளியிட்டார். புலவர் வீரமணி - திருவள்ளுவர்; பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு - பெரியார்; மருத்துவர் துரைசாமி - அம்பேத்கர்; கவிஞர் கூரம் துரை - அண்ணா; நீலகண்டன் - காமராஜர்; பேராசிரியர் கணபதிராமன் - பாரதியார்; கவிஞர் பாரதி - பாரதிதாசன்; பேராசிரியர் மறைமலை இலக்குவனார் - திரு.வி.க.; மீனாட்சி முருகரத்தினம் - கி.ஆ.பெ.விசுவநாதம் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, கலைவாணர் அரங்கில், நாளை காலை, 10:30 மணிக்கு நடைபெறும், திருவள்ளுவர் திருநாள் விழாவில், முதல்வர் பன்னீர்செல்வம், விருதுகளை வழங்குவார். விருது பெறுவோருக்கு, ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதி சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும். மேலும், வயது முதிர்ந்த, 50 தமிழறிஞர்களுக்கு, நிதியுதவி வழங்கும் அரசாணைகள் அளிக்கப்படும்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...